Monday, 1 February 2016

Interesting

1.
⚓படித்ததில் பிடித்தது:🎈

🍬கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !

💥அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!

🍭எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

🏮தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

🍡'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!

⛵வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !

🐾அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

📍இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

🚩இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!😐

🔰இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

🌀250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

🎪மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

🎯தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

🎐கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!🚏

2.
#உண்மை_சற்று_சிந்திக்கவும் .

ஒரு கிராமத்தில்
ஓநாய் ஒன்று தன் குட்டியுடன்
வாழ்ந்துவந்தது.

ஒரு நாள் ஓநாய்குட்டி தன் தாயிடம்
"எனக்கு மனிதனுடைய மாமிசம் சாப்பிட
வேண்டும்" என்றது.

ஓநாய் அலைந்து திரிந்தும் மனிதமாமிசம்
கிடைக்காததால் பன்றியின் மாமிசத்தை
கொண்டுவந்து கொடுத்தது.

அதை முகர்ந்து பார்த்த குட்டி
"இது பன்றிக்கறி எனக்கு வேண்டாம்.

மனிதமாமிசம்தான் வேண்டும் என்றது.

மீண்டும் அலைந்துதிரிந்த ஓநாய்
மனிதமாமிசம் கிடைக்காததால்
மாட்டிறைச்சியை கொண்டுவந்து
கொடுத்தது.

அதை உண்ண மறுத்த குட்டி
மனித இறைச்சிக்காக அடம்பிடித்தது.

அப்போது ஓநாய் மனதில் ஒரு திட்டம்
தோன்றியது.

அன்றிரவு அங்குள்ள பள்ளிவாசலில் பன்றிக்
கறியையும்
கோவிலில் மாட்டிறைச்சியையும்
வைத்துவிட்டு வந்துவிட்டது.

மறுநாள் காலை சென்று பார்க்கும்போது ஊர்
முழுவதும் மனிதஉடல்கள் சிதறிகிடந்தன.

ஓநாயும் குட்டியும் ஆசைத்தீர
மனிதமாமிசத்தை உண்டு தங்களது பசியை
தீர்த்துகொண்டன.

இது எப்படி சாத்தியமாயிற்று என்று குட்டி
தன் தாயிடம் வினவியது.

அதற்குஓநாய்
"90% முட்டாள்கள் வாழும் தேசத்தில்
எல்லாமே சாத்தியம்தான்"
என்று சொல்லி சிரித்தது.

3.

அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான்.
அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.
இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், ''என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?'' என்றார் அரசர்.
''ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்து கொண்டு விருந்துக்கு வருவேன்'' என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக் கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம், ''விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது'' என்றார்.
கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. 'ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்து விட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!' என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக் கொண்டான்.
வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்து விடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை.
அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் 'கந்தல் பொதி கிழவன்' என்றே அழைத்தனர்.
இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.
அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை இருக்கிறது.
அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்து
விடுகிறது.
அரண்மனைகளில் கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது.
நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.
இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.
மகிழ்ச்சியாக இருப்போம்...
😀

4.
உங்களுக்கு துன்பம் கொடுத்தோரை
பழி வாங்க போறீங்களா?

இந்த கதைய அவசியம் படிங்க அன்பர்களே!

“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள்? எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள்?

எத்தனை பேர் என் முதுகில் குத்தியிருக்கிற
ார்கள்? அவர்கள் ஒவ்வொருவரையும் பழி
வாங்காமல் ஓயமாட்டேன்” என்று
அந்த சாமியார் முன் வந்து பொருமினான் ஒரு சீடன்.

“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.
சாமி யோசித்தார்.

“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.

“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார்.

“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செதுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”.

“சரி… அப்புறம்?”

“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”..

“ப்பூ, இவ்வளவுதானா? நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்”

என்று சீடன் எழுந்து போனான்.

அன்றிலிருந்து யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.

ஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை.

ஆனால் நாளாக .....நாளாக, அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.

இதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது.

அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள்.

அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.

சீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.

“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..?” என்றான்.

“என்ன புரிந்தது?” என்றார் சாமி.

“பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும்.

துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விளக்கத்தானே இப்படி செய்தீர்கள்?” என்றான் சீடன்.

“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.

“புரியலையே…?”

“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா?”

“ஆமாம்”

“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வப்போது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா?”

“ஆமாம்.”

“மகனே, பிரச்சனை உருளைக்கிழங்கில் இல்லை. கோணிப்பை. ?!

கோணி இருப்பதால் தானே அதில்
உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய்?

எனவே,

உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க
வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி.

உனக்கு துன்பம் இழைத்தவர்கள் தண்டனை பெற்றே தீருவார்கள்.. நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”..என்றார்..

ஆம்,அன்பர்களே..

கைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் எண்ணத்தையும்,உணர்வையும் கூடத்தான்...

"மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்........

மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் ".
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு எல்லாம் காரணம்.

5.

இந்த எலி இருக்கிறதே சுவையான உணவுகளைத் தேடித்தான் போகும். இன்று எந்த வழியில் போகிறதோ நாளையும் அதே வழியில் தான் போகும். பக்கத்தில் நிறையத் தென்னை மரங்கள் இருந்தாலும் தினமும் நீங்கள் பார்க்கும் மரத்திலேயே தினமும் ஒரு இளநீராகப் பறித்துக் கொறித்துக் குடித்துக் கொண்டிருக்கிறது எலி. இப்படியே விட்டா என் பாடு திண்டாட்டமாகி விடும் என்று புலம்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் பக்கத்துத் தோட்டத்து மாமா வழியில் வந்தவராய் என்ன மாப்ள புலம்பல் என்றார் நான் காரணத்தைச் சொன்னேன். உடனே 'எண்ணிச்செய்யறது செட்டு, எண்ணாமச் செய்யறது வெள்ளாமை' என்ற பழமொழியைக் கூறிக் கொண்டே ஒரு தென்னை ஓலையை மரத்தில் கட்டி விட்டு, நாளை புது இளநி இருந்தா எங்கிட்ட வந்து சொல்லு ' என்று கூறிவிட்டுப் போனார்.

ஒரு வாரம் பார்த்தேன். கொறித்த இளநீர் விழவில்லை. பக்கத்துத் தோட்டத்து மாமனைப் போய் பார்த்து,"என்ன மாமா என்ன மந்திரம் ஓதுனீக ஒரு இளநியும் விழலையே" என்றேன். அதற்கு அவர் , "ஏடு படிச்ச மாப்ள, எலி தினமும் வந்த வழியாத்தான் வரும். பழக்கப்பட்ட வழயில குச்சி கோள் இருந்தா பொறி வச்சிருக்காங்கன்னு குச்சி கோள சுத்தி வரும். தென்ன மரம் வட்டமா இருக்கறதால சுத்திச்சுத்தி வரும் ஆனா ஓலைய தாண்டாது பொறி வச்சிருக்காங்கனு ஓடிடும்" என்று விளக்கம் கொடுத்தார். அதிலிருந்து இளநீர் கொறித்துக் கீழே கிடந்தால் இந்த வைத்தியம் தான்.

குருமார்களை வெளியே தேடவேண்டாம் அருகிலேயே இருக்கிறார்கள்...

5.

"அகத்தீயை அகற்றி" உடலுக்குத் தெம்பை அளிப்பதன் மூலம் மனத்தெம்பை மீட்பது தான் "அகத்திக்கீரை. இழவு வீட்டில் பல மணிநேரம் சரியான உணவு சாப்பிடாமல் இருந்தவர்களுக்கு அதிக ஊட்டம் நிறைந்த பயறுவகைகள் சேர்ந்து சமைத்துப் பரிமாறுவார்கள் இறுதியில் அகத்திக்கீரை இடம்பெறும்

அகத்திகீரையில் இரும்புச்சத்தும் கால்சியமும் மிகுதியாக உள்ளது. அதுபோல இவற்றில் அனைத்து வகையான தாது உப்புகள் உள்ளது. வைட்டமின் 'A'வும் உள்ளது இழவு வீட்டில் கடைசியாக பரிமாறுவதற்கு இவற்றிலுள்ள நுண்ணூட்டச் சத்துக்கள் தான் காரணம்.  அதனால் தான் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கீரையாகிறது.
-Selva

தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

6.

ஓர் ஊரில், பிரசித்திபெற்ற குரு ஒருவரது பிரசங்கத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரை அழைத்து வர குதிரைக்காரன் ஒருவன் சென்றிருந்தான். அவர்கள் வருவதற்குள் பெருமழை பிடித்துக்கொண்டது. எனவே, கூட்டம் கலைந்துவிட, குருநாதர் வந்தபோது அங்கு யாருமே இல்லை, பேசுவதற்காக நிறைய தயார் செய்து வந்த குருவுக்கு ஏமாற்றம். குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணுவதற்கு குருவுக்கு மனசில்லை. எனவே, அவனிடமே என்னப்பா பண்ணலாம்? என்று கேட்டார்.

அவனோ, ஐயா! நான் குதிரைக்காரன். எனக்கு பெரிசா எதுவும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணு... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ மற்ற குதிரைங்க எல்லாம் வெளியே போயிருக்க, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க, நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க. திரும்புவேன் என்றான்.

பொளேர் என்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு சபாஷ் போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தனது பிரசங்கத்தைத் தொடங்கினார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று பிரசங்கத்தை பிரமாதப்படுத்திவிட்டார் குரு.

பிரசங்கம் முடிந்ததும் எப்படிப்பா இருந்தது? என்று பெருமிதம் பொங்கக் கேட்டார். ஐயா.... நான் குதிரைக்காரன். எனக்கு பெரிசா எதுவும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணு... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன் முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வரமாட்டேன்! என்றான்.

மற்றவர்களுக்கு எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டுமே சொல்லவேண்டும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை சொல்வதும், போதிப்பதும் நம்மைதான் முட்டாளாக்கும்.

7.
ஓர் இளைஞன் B.E பட்டதாரி. எங்கெங்கோ வேலை தேடினான். .🚶🏻
அவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை.
எங்கும் வேலை கிடைக்க வில்லை.
ஒரு நாள்
அந்த ஊருக்கு ஒரு சர்க்கஸ் கம்பெனி வந்தது.
அதிலாவது ஏதேனும் வேலை கிடைக்குமா? என்று அந்த
சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக் கேட்டான்.
அவனும் வேலை காலி இல்லை என்றான்.
பிறகு இவன் எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள்
என்று கெஞ்சினான்.
அந்த முதலாளி சொன்னான்.
தம்பி கம்பெனியில் இருந்த குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது.
அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால்
உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச்
சேர்ந்தான். குரங்கு செய்யும் வித்தைகளை எல்லாம்
கற்றுக்கொண்டு குரங்கு வேசம் போட்டு இவனும் செய்தான்.
ஒரு நாள் சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது.
பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது. அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில்
இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான்.
அடி அவ்வளவாக படவில்லை. ஆனால்
இவன் கீழே விழுவதற்கும் அங்கே கூண்டிலிருந்த
சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாக
இருந்தது.
நம்மாள் நடு
நடுங்கிப் போனான். வயிற்றுப் பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம். இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப் போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான்.
பேச நா கூட வரவில்லை. இவன் அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து. அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது.
சரி நம் கதை முடிந்தது.. என்று நினைத்தான். குரங்கு வேடத்தில் இருந்த B.E பட்டதாரி.
🐅சிங்கம் மெல்ல வாயைத்
திறந்து பேசியது. “ஏ! B.E! பயப்படாதே நான் M.E, ”
என்றது..
👹துன்பங்கள் துரத்தினாலும் வாழ்க்கையை சிரிப்பொலியுடன் கடந்து போவோம்..

7.
அரசுக்கு ஒரு சவால்..!!!

எதிர்வரும் காலத்திற்கான ஒரு அவசியமான தகவல் நண்பர்களே..படித்துவிட்டு பகிருங்கள்..!!

இதுவும் ஒரு புரட்சியே! இயற்கை புரட்சி!!
நம் கையில் பழத்தை வைத்துகொண்டு (இயற்கை எரிவாயு), ஏன் அடுத்த நாட்டிடம் ஏன் கையேந்த வேண்டும்(கச்சா எண்ணை) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை: (Rs)75.00 ரூபாய்: இயற்கை எறிவாயு (எத்தனால்) தயாரித்தால் -1 லிட்டர் 13.00ரூபாய்
எரிபொருளின் விலை குறைவதால் – சரக்கு போக்குவரத்து எளிதாகும் – மலிவாகும்.

எனவே, தரை வழியாக கொண்டு வரப்படும், காய்கறி,மளிகை சாமான்கள், பால் – அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில் குறையும்.எத்தனால் கலந்த புதிய, மலிவான, எரிபொருளை பயன்படுத்துவதால் ஆட்டோ, பஸ், லாரி போக்குவரத்து செலவு குறையும்.டாலரின் மதிப்பு ரூபாய் விட குறையும்!!!
ஒரு கிலோ சர்க்கரைக்கு பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம்.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. பெட்ரோலுடன் 24 சதவீதம் எத்தனால் கலந்து ஓட்டலாம். இதற்கு வாகனத்தில் எந்த மாற்றமும் செய்யவேண்டியதில்லை. இதேபோல் எத்தனால் 85 சதவிதமும், பெட்ரோல் 15 சதவீதமும் கலந்து பயன்படுத்தலாம்.

எத்தனால் செய்யும் முறை!!

எத்தனால் என்பது – விவசாயப் பொருட்களிலிருந்து
தயாரிக்கப்படும் – எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய,ஆக்சிஜனை உள்ளடக்கிய,ஒரு நிறமற்ற திரவம். (CH3CH2OH )
இதை பஸ், கார் போன்ற வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம். வழக்கமாக பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தும் போது, கார்பன் வெளியேறி, சுற்றுப்புறசூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கிறது.

ஆனால் எதனாலை எரிபொருளாக பயன்படுத்தும்போது, கரும் புகை வெளிப்பாடு குறைந்து,ஆக்சிஜன் அதிக அளவில் வெளியேறி, சுற்றுப்புறத்தை சுத்தம் செய்கிறது. உலக பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வரும்பிரேசில் நாடு பெட்ரோல் மற்றும் டீசலுடன் 85 % எத்தனாலை கலந்து பயன்படுத்துவதை கட்டாயமாக்கி இருக்கிறது.பிரேசிலில்1980க்குப் பிறகு வடிவமைக்கப்பட்டஅனைத்து எஞ்ஜின்களும் 85 % எத்தனாலை கலந்துபயன்படுத்த தகுதியுள்ளவாறு தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

நம்ம கடிச்சி துப்புற கரும்பு சக்கையிலருந்தும், அப்பறம் சோளத்தை எடுத்துட்டு தூக்கிப்போடற கதிரு கச்சையிலிருந்தும் இந்த பெட்ரோல் எரி பொருள் தயாரிக்கலாம் கரும்பின் கழிவுப்பொருளாகக் கருதப்படும் கரும்புச்சக்கையிலிருந்து எத்தனால் தயாரிக்கவும், அந்த எத்தனாலை பெட்ரோல் மற்றும் டீசல் போன்றஎரிபொருட்களுடன் கலந்து வாகனங்களுக்கு பயன்படுத்தவும் துவங்கினால் -உற்பத்தியாகும் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும்.
இவ்வளவு நாட்களாக கழிவுப் பொருளாக கருதப்பட்டகரும்புச்சக்கை இதன் மூலம் நல்ல விலை போகும் என்பதால் – சர்க்கரை விலை கணிசமாக குறையும்.

கரும்பு உற்பத்தியாகும் நிலங்களின் அளவு அதிகரிக்கும்.இன்னும் அதிக அளவு விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஒரு கேலன் என்பது மூன்றரை லிட்டருக்குச் சமம். ஒரு கேலன் எத்தனால் தயாரிக்க 40 ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவாகிறது இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் – 25 கிலோ; கழிவு (தீவனம்) – 330 கிலோ. தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது.

உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.

கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது …

6.
கீழேக் கொடுக்கப்பட்டிருக்கும்
தகவல்,
உங்களுக்கு ஏற்கனவே
தெரிந்திருக்கலாம்..

ஒருவேளை தெரியாது போயிருப்பின் தெரிந்துகொண்டு,
அதை மற்றவர்களும்
தெரிந்துகொள்ளுமாறுச்
செய்யவும்..

நம்மில் யாரேனும்
'எல்லாவற்றையும் இலவசமாக'
அனுபவித்தால்,
அவரை,
'ஓசி'யிலேயே எல்லாவற்றையும் அனுபவிப்பவர்
என்று நாம் சொல்வதுண்டு...

அது என்ன ஓசி..?

இந்தக்கேள்வி நீண்டநாட்களாக
பள்ளிப் பருவத்திலிருந்தே
எனது மண்டையைக் குடைந்துவந்தது..

நான் எதிர்பாராத நேரத்தில்,
இதற்கான பதிலும் எனக்குக் கிட்டியது..
அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

நமது இந்தியா,
ஆங்கிலக் கிழக்கிந்தியக்
கம்பெனியின்
கட்டுப்பாட்டில் இருந்தபோது,
'இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு'
அரசாங்கக் கடிதங்களும்,
ஆவணங்களும் மற்ற கோப்புகளும்
தபால் மூலமாக கடல்வழியாக அனுப்பப்பட்டுவந்தன..

இதில்,
ஒவ்வொரு கடிதத்திலும் 'அஞ்சல் தலைகளை'
கடிதங்களின் எடைக்கேற்ப
மதிப்பீடு செய்யப்பட்டு ஒட்டப்பட்டது..

இங்கே இருக்கும்
'ஆங்கிலேய அரசிடமிருந்து'
இங்கிலாந்தில் இருக்கும்
'தலைமை அரசாங்கத்திற்கு'
அனுப்பப்படும் கடிதங்களுக்கு,
எதற்காக வீண்செலவு என்று யோசித்த
ஆங்கில அரசு,
புதிய நடைமுறையைக் கொண்டுவந்தது..

அதாவது,
அரசாங்கம் சம்பந்தப்பட்ட
கடிதப் போக்குவரத்துகளில்
தபால்தலைகளை ஒட்டி
வீண் செலவு ஏற்படுத்துவதற்கு பதிலாக,
அக்கடிதங்களில்
O.C.S [ On Company Service]
என்று அச்சிடுவது
என முடிவுசெய்து,
அதன்படியே
செயல்படுத்தப்பட்டது..

அதாவது,
O.C.S. என்றால்,
பணம் செலவு செய்யாமல்
கடிதங்களை அனுப்புதல் என்று பின்னாளில்
நம்மக்களுக்குத் தெரிந்தது..

இதனைத் தொடர்ந்து
O.C.S. என்ற வார்த்தை
மக்களிடையே பிரபலமடைந்தது..
அதன்பிறகு
O.C.S. என்ற இந்த வார்த்தை,
எல்லா கட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது..

பின்னாளில் O.C.S. என்ற
வார்த்தை மருவி
O.C. என்று சுருங்கியது..

அதன்பிறகு,
எவரேனும் 'இலவசமாக பணமேதும் கொடுக்காமல்'
பொருட்களை வாங்கினால்,
அவரை O.C. என்று அழைக்கும் பழக்கம்
மக்களிடையே
ஏற்பட்டது..

On Company Service என்ற இந்த முறைதான்,
இன்றும்
நமது இந்திய அரசுத்துறைகளில்
On I.G.S. Only..
[On Indian Government Service Only] என்ற பெயரில்
செயல்பட்டுக்கொண்டிருக்கிறது..

இத்தகவலை
முழுமையாகப்
படித்தமைக்கு
நன்றி...!

via ஃபீனிக்ஸ் பாலா

________________ _________________________

8.
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
மாற்று கோணம் நமக்கு முக்கியம்
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார்.

பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”என்றார்.

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!
💎💎💎💎💎💎💎💎💎💎💎

9.
பஸ்சுல கலெக்டரே ஏறினாலும்,
முதல் சீட் டிரைவருக்குதான்.
என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது.
ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும், ஆனா ஆயிரம் யானைகள் நினச்சாலும் ஒரு எறும்பையும் கடிக்க முடியாது.
குவாட்டர் அடிசிட்டு குப்புற படுக்கலாம், ஆனால் குப்புற படுத்துட்டு குவாட்டர் அடிக்க முடியாது.
ரயில்வே ஸ்டேசனில் போலீஸ் ஸ்டேசன் இருக்கலாம், ஆனால் போலீஸ் ஸ்டேசனில் ரயில்வே ஸ்டேசன் இருக்க முடியாது.
என்னதான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் துரத்தினால் ஓடித்தான் ஆகணும்.
ஊருக்கே கேக்குற மாதிரி சத்தமா கொறட்டை விட்டாலும், .......... உன் குறட்டையை நீ கேட்க்க முடியாது.
மின்னலை பார்த்தால் கண்ணு போயிடும், பாக்கலன்னா மின்னல் போயிடும்..
நீங்க படிச்சி எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம், ஆனால் டெத் சர்டிபிக்கேட்டை வாங்க முடியாது.
மண்ணிலிருந்து மண்ணெண்ணை எடுக்கலாம்,
கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா.................?
போலீஸ் ஸ்டேசனுக்கு போன் போட்டா போலீஸ் வரும், ரயில்வே ஸ்டேசனுக்கு போன் போட்டா ரயில் வருமா ??
தண்ணியில கப்பல் போனா ஜாலி, கப்பல்ல தண்ணி போனா காலி.
ஹோட்டலில் காசு கொடுக்கலேன்னா மாவாட்ட சொல்லுவாங்க, ஆனா பஸ்சுல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்ட சொல்லுவங்க்களா??
யானை மீது நாம உக்காந்தா சவாரி, நம்ம மேல யானை உக்காந்தா ஒப்பாரி.
அம்மா அடிச்சா வலிக்கும், போலீஸ் அடிச்சா வலிக்கும், பிரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்...................... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?
வாயால நாய்னு சொல்ல முடியும்,....... ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியாது.
டீ ஸ்பூனால டீ கலக்கலாம், டேபிள் ஸ்பூனால டேபிளை கலக்க முடியுமா..?..........

No comments:

Post a Comment