Thursday 31 March 2016

Tamil

1.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி….

Vanchi kodi for aids

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்ல மருந்து- அன்றே அகத்தியர் கண்டறிந்த அதிசய, அபூர்வ மூலிகை

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு நல்ல மருந்து- அன்றே அகத்தியர் மாமுனி கண்டறிந்த
அதிசயம் – அபூர்வ மூலிகை
தலவிருட்சங்கள் தரும் பலன்கள் – வஞ்சிக்கொடி
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோயில்களிலும், விஷ்ணு கோயில்களிலும் தல விருட்சங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குறிப் பாக தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த புராணக் கால கோயில்கள் அனைத்திலும் பல்வேறு வகையா ன மரங்கள் தலவிருட்சங்களாக பக்தர்களால் வணங் கப்படுகின்றன. இவை வெறும் மரங்களல்ல; கொடிய நோய்களை குணமாக்கக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இதனாலேயே இந்த மரங்கள் தெய்வீக தன்மை கொண்டிருக்கின்றன.
பெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்று நோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்று ம் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என் று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும். சித்த வைத் தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது . சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்த வல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கு ம் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து வஞ்சிக் கொடியில் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும். வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளு க்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என் று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார் . இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மே ற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப் பட்டுள்ளது. மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப் பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக் கூடி ய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக் கப்பட்டுள்ளது.
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறு நீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப் படுகிறது. சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்டகாய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரிய ம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கச ப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது. ஆலமரத் தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகி ன்றன.

தண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத் தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும். வேதத்தில், ‘தன்வந்திரி மகரிஷியின் இரண்டு கைக ளாக சீந்தில் கொடி உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மூலிகைச் செடிகளில் சீந்தில் கொடி முதன்மையான இடத்தில் உள்ளது. இதை மெய்ப்பிக்கு ம் வகையில் ராமாயண சம்பவம் ஒன்றைக் குறிப்பிட லாம். “ராமனுக்கும், ராவணனுக்கும் கடும் போர் நடந் து கொண்டிருக்கிறது.
ராமர் தனது படையில், சுக்ரீவன் தலைமையிலான குரங்குகளைப் பெருமளவில் பயன்படுத்தினார். இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டன. தமது படையில் இறந்துபோன குரங்குகளை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று ராமன் விரும்பினான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற தேவேந்திரன் அங்கே வந் து அமுதத் துளிகளை பூமியில் தெளித்தான். மண்ணி ல் அந்த அமுத நீர் பட்ட இடங்களிலெல்லாம் சீந்தில் கொடி முளைத்து வளர்ந்தது. அந்த சீந்தில் கொடியின் காற்று பட்டதும் இறந்து கிடந்த குரங்குகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுந்தன. இதைக்கண்டு ராமன் மகிழ்ச்சி அடைந்தான்.
இதனால்தான் சீந்தில் கொடியை சாகா மூலிகை என் றும் சித்தர்கள் அழைத்தார்கள். மரணத்தை வெல்லக் கூடிய மூலிகைகளில் சீந்தில் கொடியும் ஒன்று. சீந்தில் கொடி என்கிற வஞ்சிக் கொடியை, திருக்கரு வூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் தல விருட்சமா கத் திகழ்கிறது. இந்த ஒரு கோயிலில் மட்டும் தான் வஞ்சிக் கொடி தலவிருட்சமாக இருப்பதாக அறிய முடிகிறது. கோயில் பிராகாரத்தில் வன்னி மரத்தில் வஞ்சிக்கொடி படர்ந்திருப்பதை காணலாம். வஞ்சிக் கொடி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

இந்த வஞ்சிக்கொடியை உட்கொண்டு கடுவெளி சித்தர் பல ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து, பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார். குலோத்துங்க சோழன் ஆட்சி காலத்தில் கடும் பஞ்சத்தில் இருந்து மக்களைக் காத் தவர் இந்த கடுவெளி சித்தர். திருக்கருவூரில்தான் பிர ம்மன் தனது படைப்புத் தொழிலைத் தொடங்கினான் என்று கோயில் தலப்புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர்,

“தொண்டெலாமலர் தூவியேத்த நஞ்சு
உண்டலாகுயிர் ஆய தன்மையர்
கண்டனார் கருவூருள் ஆனிலை
அண்டனார் அருள் ஈயும் அன்பரே”
– என்றும்
“தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி வெய்த வில்லியர்
காவலர் கருவூரு னானிலை
மூவராகிய மொய்ம்பரல்லரே!’’
- என்றும் பாடியுள்ளார்.

திருக்கருவூர் திருத்தலம் பல்வேறு சிறப்புகளைக் கொ ண்டது. பலருக்கு முக்தியளித்த தலம். கருவூர் சித்தர் ஜீவசமாதியடைந்து அருவமாக இறைவனுக்கு பூஜை செய்து வருவதாக இன்றளவும் பக்தர்களால் நம்பப்ப டுகிறது. படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்த பிரம் மன் ஒருமுறை சற்று கண் அயர்ந்தநேரம் பார்த்து காமதேனு பசு இறைவனை வணங்கி, தானும் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டி தவம் இருந்த தலம். இதனால்தான் திருக்கருவூருக்கு கருவூர், கற்ப புரி என்றும் இறைவனை பசுபதீஸ்வரர் என்றும் அழை க்கிறார்கள்.

தேவர்கள், சுக்கிரன், முசுகுந்த சோழ மன்னன், பிரம்ம ன், திக்குப்பாலர்கள் இறைவனை பூஜித்த தலம்தான் திருக்கருவூர். விபண்டன் என்ற வேடனுக்கும் எறிபத்த நாயனாருக்கும், புகழ்ச் சோழ நாயனாருக்கும் இறைவ னால் முக்தி அளிக்கப்பட்ட தலமாகும். கருவூர் திருச்சி யில் இருந்து கோவை செல்லும் சாலையிலும், ரயில் மார்க்கத்திலும் உள்ளது. திருச்சியில் இருந்து 45 மைல் தொலைவில் உள்ளது. சாகா மூலிகையான வஞ்சிக் கொடியை தலவிருட்சமாகக் கொண்டிருக்கும் கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று இறைவனை வழி பட்டு பேரருள் பெறுவோம்.
http://tamilkacheri.blogspot.in/

Vada ennai

வாத எண்ணெய்
இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்
வாத எண்ணெய்
௧) எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
௨)காடி நீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
௩)மருந்துப் பொருட்கள்
சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
௪)மருந்து சாப்பிட
நாட்டுப் பசும்பால்
வாத எண்ணெய் செய்யும் முறை
அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்
ஆ)இந்த சூரணத்தில்
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்
இ)வாணலியை அடுப்பிலேற்றி
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்
மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும்
நுரை அடங்கி வரும்
நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்
இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்
இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
வாத எண்ணெய் என்று பெயர்
ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை
உள் மருந்தாக
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து
இறக்கி
குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன்
அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து
உணவுக்குப் பின்
அரை மணி நேரம் கழித்து
காலை மாலை என
தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும்
வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை
தினமும் இரவில்
கை கால்களில் தேய்த்து
மென்மையாக மசாஜ் செய்து
மறு நாள் காலையில்
இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்
இவ்வாறு தினமும் செய்து வர
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்
நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
கைகால்கள் வீக்கம்
வலி
போன்ற அனைத்து வாத நோய்களும்
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்
இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்
தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்

Pain - thailam

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.

இப்பொழுது அதன் செய்முறை பார்ப்போம். பிறகு அதன் பலன்களை பார்ப்போம்.

சித்த மருத்துவத்தில் செடி, கொடி, பட்டை, வேர், தழை முதலியவற்றை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று வீரம், பூரம்,லிங்கம்,தாளகம், துத்தம் போன்ற பாஷணாங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று தங்கம், வெள்ளி, செம்பு, அயம், பித்தளை போன்ற உலோகங்களை கொண்டு மருந்து செய்வது ஒரு முறை.

மற்றொன்று வெடியுப்பு, இந்துப்பு, போன்ற உப்புக்களை கொண்டு செய்வது ஒரு முறை.

நாம் ஒரு முறையை பார்ப்போம்.

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
புதினா உப்பு
ஓம உப்பு
கட்டி கற்பூரம்

இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.
சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.

இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.

இப்பொழுது தைலம் தயார்.
இது மிகவும் வீரியமான தைலம்.
உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.

இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.
பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.

இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.

கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.

சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.

இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.

Arivalmanai Poondu

அரிவாள்மனைப் பூண்டு . . .

மூலிகையின் பெயர் -: அரிவாள்மனைப் பூண்டு.

தாவரப் பெயர் -: SIDA CAPRINIFOLOLIA.

தாவரக்குடும்பம் -: MALVACEAE.

வேறு பெயர்- BALA PHANIJIVIKA.

பயன்தரும் பாகங்கள் . . .

இலை, விதை, வேர்

வளரியல்பு . . .

அரிவாள்மனைப் பூண்டு எல்லாவித மண்ணிலும் வளரும். ஆனால் செம்மன் நிலத்தில் நன்கு வளமுடன் வளரும். கூர் நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக்குறுஞ் செடியினம். மாரிக் காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில் தானே வளரும். குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும். இது விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

மருத்துவப் பயன்கள் . . .

இதன் வேர் பொடி நரம்புத் தளர்ச்சியை போக்க வல்லது. ஞாபகச் சக்தியை கூட்ட வல்லது. ஆண்,பெண் சிறு நீர் கழிக்கும் பாதையை சுத்தப் படுத்த வல்லது. தகாத உடல் உறவால் ஏற்படும் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும்.

ஒரு தேக்கரண்டிப் பொடியை தினமும் உணவிற்குப் பின் 2 வேளை பெண்கள் உட்கொண்டால் உடல் பலஹீனம் ஆவதைக் கட்டுப்படுத்தும்.

இதன் பொடி அரைத் தேக்கரண்டியுடன் தேன் சேர்த்து உரத்த குறலில் பேசியும், மேல்கட்டை பாடலாலும் தொண்டையில் ஏற்பட்ட வரட்ச்சி, கம்மல் ஆகியவற்றை குணமாக்கும்.

இதன் வேர், விதை இவைகளை இரண்டுக்கு ஒன்று என்ற விகித த்தில் கலந்து பொடி செய்து சர்கரையுடன் சேர்த்துத் தினம் 3 வேளை சாப்பிட்டால் ஒரு வாரத்தில் உடலில் ஏற்படும் எரிச்சில் குணமாகும்.

இதன் வேரை எடுத்துத் துண்டுகளாக வெட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி சுண்ட வைத்து கால் லிட்டர் ஆனவுடன் அந்தக் கசாயத்தை சாராயம் அருந்தித் தொண்டையில் எரிச்சல் உள்ளவர்கள் தினம் இரு வேளை 2 அவுன்ஸ் வீதம் ஒரு வாரம் குடித்தால் குணமடைவர்.

இதன் பொடி 10 கிராம் எடுத்து 80 மி.லி. நீரில் கொதிக்க வைத்து 20 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி ஒரு கப் காலை மட்டும் குடித்து வர மூக்கு, வாய் மற்றும் உடலில் ஏற்படும் இரத்த ஓட்டத்தைக் கட்டுப் படுத்தும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலையுடன் சம அளவு குப்பை மேனி இலை, பூண்டுப் பல் 2, மிளகு 3 சேர்த்து அரைத்து புன்னைக் காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து காயத்திலும் கட்ட நஞ்சு முறியும். அப்போது உப்பு, புளி நீக்க வேண்டும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை சம அளவு எடுத்து அரைத்து புழுவெட்டின் மீது தடவி வர விரைவில் மாறும். இதன் இலையை மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மீது தடவி வர குணமாகும். மேலும், அரிவாள்மனைப் பூண்டின் இலை, கிணற்றுப் பாசான் இலை, எலும்பு ஒட்டி இலை வகைக்கு சம அளவாக எடுத்து அரைத்துப் பற்றிட காயங்களில் உண்டான வீக்கம் விரைவில் குணமாகும்.

அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வர விரைவில் குணமாகும்.

‘வெட்டுக்காயத்தை விரவி லுர்த்திவிடுந்
துட்டக் கடுவோட்டுத் தோன்றிமிகக் கெட்ட
பிரிவாற் றலையைப் பினக்கும் வலி நீக்கு
மரிவாள் மூக்குப் பச்சிலை.’

அரிவாள் மூக்குப் பச்சிலையானது ஆயுதங்களால் உண்டாகின்ற காயத்தைச் சீக்கிரத்தில் ஆற்றுவதுந் தவிர மாக விஷத்தையும் உதிரக் கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலகும் என்க.

அரிவாள் மூக்குப் பச்சிலையைக் காரமில்லாத தட்டை அம்மிக் கல்லில் வைத்து வெண்ணெய் போல் அரைத்து வெட்டுப் பட்ட காயங்களுக்குத் தடவச் சீலைக் கொண்டு அழுத்திக் கட்ட இரத்தம் சொரிதல் நீங்கி விரைவில் ஆறும். இந்த இலையுடன் சிறிது மிளகு பூண்டு கூட்டி அரைத்து வேளைக்கு சிறு சுண்டைக்காய் பிரமாணம் அந்தி சந்தி 3 நாள் கொடுத்துப் பாற் பத்தியம் வைக்கக் கடுமையான விஷங்கள் இறங்குவதுடன் தலை வலியும் நீங்கும்.

-----------------------------------------------------
https://www.facebook.com/Siththar.Masters

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.

Wednesday 30 March 2016

banana leaves

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…
முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்.