Tuesday 27 August 2019

Ulcer remedy

அல்சர் (Ulcer)
**************

             வயிற்றின் மேல்பகுதியில் வலி,எரிச்சல் மற்றும் வாந்தி போன்றவை தொடர்ச்சியாக இருப்பின் அல்சர் நோயாக இருக்கலாம்....

              சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளாமை,சூடான உணவை உண்ணுதல்,அதிகப்படியான காரத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுதல்,துரித உணவுகள் போன்ற காரணங்களினால் அல்சர் உண்டாகலாம்....

               உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்க,டின்னில் அடைத்து பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுதல்,அதிக Dosage உள்ள மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாலும் உண்டாகும்....

                Omez, Panwal, Pansol -D, Ranitidin என்று நிறைய மாத்திரைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன, கம்பெனியின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயிக்கப்பட்டு.....

                 Omeprazole
                 Pantaprazole
                 Rantaprazole  இவை அல்சருக்கான மருந்துகள் ஆகும்.உடனடி நிவாரணத்திற்கு Digine syrup&chewing tablet.Sucrafil syrup,இதன் செயலும் சிறப்புற இருக்கும்....

                      உண்மையில், இவை அனைத்தும் அல்சரை குணப்படுத்த அதிக காலம் எடுத்துக்கொள்ளும்..அதுவரை வலியை வேண்டுமாயின் குறைக்கும்...

                          இதற்கு வீட்டிலேயே சிறப்பான மருத்துவம் உண்டெனில்,அது சோற்றுக்கற்றாழை.இதன் சதைப்பகுதியை காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர அல்சர் இருந்த இடம் தெரியாமல் குணமாகும்..சற்று கசப்பாக இருக்கும்....

                             இத்தனை மெனக்கெடாமல் சுலபமாக குணம் பெறவும் வழியுண்டு....
பழைய சாதமும் சின்ன வெங்காயமும் காலை உணவாக உண்டு வர அல்சர் விரைவில் குணமாகும்.....

                        வீட்டில் நீர் ஊற்றி இயற்கையாக புளிக்க வைத்த பழைய சாதத்தில் புரோபையோடிக் எனும் நன்மை தரும் பாக்டீரியா உள்ளது.நல்ல பாக்டீரியா குறைந்து கெட்ட பாக்டீரியா அதிகரிப்பதால் செரிமானம் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்..

                              இதனாலேயே காலையில் எழுந்ததும் நீராகாரம் அருந்த சொன்னனர் நம் முன்னோர்கள்...

இட்லி,தோசை,பூரி இவை தான்  நாகரீகம் எனும் எண்ண விதைப்பே  வணிகத்தின் வெற்றி...