Thursday 27 September 2018

Natural remedies

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!!
• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
எளிய இயற்கை வைத்தியம்
1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.
50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.
52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.
54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

Friday 21 September 2018

Nambi malai

நம்பிமலை அற்புதங்கள்!
***************************

நம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திப்பெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமா கத் திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையைப் போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்குத் திகழும்  மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரைக் கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகிலுள்ள வைணவ திருத்தலம் திருக்குறுங்குடி. இங்கிருந்து களக்காடு செல்லும் வழியில் பெரிய குளம் ஒன்று உள்ளது. `வட்டக் குளம்’ என்கிறார்கள். அதை யொட்டி வட்டப்பாறை அருகில் கோயில் கொண்டிருக்கிறார் சுடலை யாண்டவர். இவரை வழிபட்டுவிட்டு நகர்ந்தால், இந்தப் பகுதியிலுள்ள தோரண வளைவி லிருந்து தொடங்குகிறது நம்பிமலை பயணம்.

அடுத்துத் தொடரும் பயண வழியில் சிவசாமி ஆசிரமம், வெள்ளவேஷ்டி சாமி ஆசிரமம், அருள் ஜோதி ஆனந்த தியான பீடம் எனப் பல ஆசிரமங் கள் உள்ளன. வட்டக்குளத்திலிருந்து சுமார் 6 கி.மீ தூரத்தைக் கடந்தால் வனத் துறையின் செக் போஸ்ட் வருகிறது. அதைத் தாண்டி செல்ல தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

அங்கு,முறைப்படி பெயர் முதலான விவரங் களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்த இடத்துக்குமேல் வாகனங்களில் பயணிக்க இயலாது; சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதையில் நடக்கவேண்டியிருக்கும். சற்றுக் கடினமான பயணம்தான். எனினும், பக்தர்கள் திருமலை நம்பியின்மீது அதீத நம்பிக்கை யோடும் பக்தியோடும் மலையேறுகிறார்கள்.

பெரும்பாலும் மலைக் கோயில்கள் சித்தர்களால் சிறப்பு பெற்றது என்பார்கள். இந்த மகேந்திரகிரி மலைப்பகுதியிலும் அகப்பேய் சித்தர், கல்யாணி சித்தர் உள்பட பல சித்தர்கள் நித்யவாசம் செய்வ தாகவும், மனதாலும் புலன்களாலும் நன்கு பக்குவப்பட்டவர்கள், இங்குள்ள சித்தர்களின் அனுக்கிரகத்தைப் பெறலாம் எனவும் நம்புகிறார் கள், இப்பகுதி மக்கள். முன்னொரு காலத்தில் உலகம் சுபிட்சம்பெற சிவனும், பார்வதியும் தவம் செய்த இடம் இம்மலை என்பது கூடுதல் சிறப்பு.

மலை மீது ஏறும்போதே  மகேந்திரகிரியைப் பற்றி அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1800 மீட்டர் உயரம் கொண்டது இந்த மலை. அடர்ந்த வனம்  மற்றும் ஓடைகள் நிறைந்தது இந்த மலைப்பகுதி. மலையின் அற்புதமான சீதோஷ்ண நிலையில் மூலிகைகள் செழித்து வளருகின்றன. தொழு கண்ணி, அழுகண்ணி, இடிநருங்கி, மதிமயங்கி, கருணைக் கிழங்கு, மலைநீலி, நீலத்தும்பை, அழவணம், கல்தாமரை, குமரி, குறிஞ்சிச் செடி, மருள், நாகதாளி, திருநீற்றுப் பூண்டு, பொன்னா வாரை, பேய்த்தி, பூவரசு, காட்டுச் சீரகம், மகா வில்வம், தான்றிக்காய் போன்ற மருத்துவ குணம் மிக்க அரிய மூலிகைகள் நிறைந்து திகழ்கின்றன.

திருப்பதியில் ஏழு மலைகள் எனில், ஏழு ஏற்றங் களுடன் திகழ்கிறது நம்பிமலை. ஒவ்வொரு ஏற்றத்திலும் ஏறும்போது அதிகம் மூச்சு வாங்கு கிறது. ஆனாலும், அடுத்தடுத்த ஏற்றங்களில் ஏறுவதற்கு மனம் சலிப்பதில்லை. இறையருளே அதற்குக் காரணம் எனலாம். வயதானவர்கள், நம்பியை தரிசிக்க இந்த வழியாக நடந்து செல்ல இயலாது. அவர்கள் ஜீப்பைப் பயன்படுத்து கிறார்கள்.

வழியில் பல இடங்களில் சிறு சிறு ஓடைகளாக குறுக்கிடுகிறது நம்பியாறு. இது `மாயவன் பரப்பு’ என்ற இடத்தில் ஐந்து சுனைகளாக தோன்றுகிறது. பின்னர் `கடையார் பள்ளம்’ வழியாக தாய்ப்பாதம் எனும் இடத்தைத் தொட்டு, நம்பி கோயிலை வந்தடைகிறது. பல வகை மூலிகைகளின் சாரத்தை ஏற்று, நோய் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது நம்பியாறு.

கோயிலுக்கு வேண்டிய தீர்த்தம் எடுக்கப்படுவ தால், இந்த ஆற்றில் நீராடும் பக்தர்கள் எண்ணெய் மற்றும் சோப்பு பயன்படுத்தக் கூடாது என்ற தடை உள்ளது.

நம்பியாற்றைக் கடந்துதான் நம்பி கோயிலுக்குச் செல்ல முடியும். ஆற்றைக் கடக்க பாலம் அமைத் திருக்கிறார்கள். பாலத்தின் அருகில், இடப்புறமாக படிக்கட்டுகள் செல்கின்றன. அதன் வழியே கீழே இறங்கினால், சிறு காவல் தெய்வங்களுக்குப் படையல் போடும் காட்சியைக் காணலாம். பாலம் அமைந்துள்ள பகுதி பள்ளத்தாக்காக திகழ்கிறது.

இங்கு நிகழும் அற்புதங்கள் நம்மை வியக்க வைக்கும். உதாரணத்துக்கு ஒன்று... சங்கிலிபூதத்தார் வழிபாடு தென்பகுதியில் பிரசித்திப்பெற்றது. இந்தத் தெய்வத்துக்கான கோமரத்தாடிகள் (சாமியாடிகள்), குறிப்பிட்டதொரு வைபவத்தின் போது, ஆற்றுக்குள் மூழ்கி... முந்தைய வருடம் ஆற்றில் போடப்பட்ட இரும்புச் சங்கிலியை மிகத் துல்லியமாகத் தேடி எடுத்து வருவார்களாம்!

ஆற்றுப் பாலத்தைக் கடந்தால், இடப்புறத்தில் மிக உயரத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக் கிறார் திருமலை நம்பி. கோயில் அமைந்திருக்கும் முகட்டின் அடிவாரத்தில் புற்று ஒன்று வழிபாட் டில் உள்ளது. அதில் 210 சித்தர்கள் இருப்பதாகவும், தினம் ஒருவர் வீதம் நம்பிமலை பெருமாளைப் பூசிப்பதாகவும் நம்பிக்கை. அவர்கள் பூஜை செய்த பிறகே அர்ச்சகர்கள் பூஜையைத் தொடர்வார் களாம். நம்பிமலையில் எல்லா திருவிழாவும் விசேஷம்தான். ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையில் நடைபெறும் உறியடித்திருவிழா மிக மிக விசேஷம். அதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

எழிலார்ந்த சூழலில் கோயில்கொண்டிருக்கும் மலைமேல் நம்பியை தரிசித்தோம். சிறிய அளவிலான கோயில்தான். ஆனால் பெருமாளின் அழகும், அருள் திறனும் நம்மைப் பெரிதும் ஈர்த்து விடுவதை நம்மால் அனுபவபூர்வமாக உணர முடிகிறது. `நம்பி வாருங்கள், நம்பி மலைக்கு! நீங்கள் நாடியதை எல்லாம் நானே உங்களை நாடி வந்து நிறைவேற்றுவேன்’ என்று தண்ணருள் பொழியும் கண்ணழகால் சொல்லாமல் சொல் கிறான் அந்த அழகன்.

மலை மேல் நம்பியை நாம் சனிக்கிழமை தோறும் நாம் தரிசிக்கலாம். நின்ற நிலையில் நமக்கு அவர் அருளாசி தருகிறார். ``வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருபவர் இந்த நம்பி; நம்பினோரை ஒரு போதும் கைவிடமாட்டார்'' என்கிறார்கள், அங்கிருந்த பக்தர்கள்.

மலைமேல் நடுக்காட்டுக்குள் இருக்கும்  இந்த நம்பியைத் தரிசிக்க வரும் பக்தர்களையும்,  கோயிலையும் சங்கிலிபூதத்தார் தெய்வம் காவல் காப்பதாக ஐதீகம்.

நம்பிமலையில் கோயில்கொண்டிருக்கும்  இந்த நம்பி ரிஷிகேசனாக `மலைமேல் நம்பி' என்று திகழ, திருக்குறுங்குடி திருத்தலத்திலுள்ள கோயி லில் நின்ற நம்பி - திரிவிக்கிரமனாகவும், இருந்த நம்பி - ஸ்ரீதரனாகவும், கிடந்த நம்பி - பத்ம நாபனாகவும், அந்தக் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ள கோயிலில், திருப்பாற் கடல் நம்பி என்ற பெயரில் வாமனனாகவும் அருள்பாலிக்கிறார்கள்.

பக்தர்கள் திருக்குறுங்குடி, நம்பிமலை இரண்டு தலத்தையும் ஒருங்கே தரிசிப்பது பெரும்புண்ணியம்! நாமும் இந்த இரண்டு தலங்களையும் தரிசித்துத் திரும்பிய தருணத்தில், நம் மனத்தில், நம்பியின் அருளால், நம்பியின் அம்சமாக அவதரித்த நம்மாழ்வார், நம்பியைப் போற்றிய ஓர் அகச்சுவைப் பாடல் எதிரொலித்தது.
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!
என்னை முனிவது நீர்?
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை
நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும்
செல்கின்றது என் நெஞ்சமே!

ஆழ்வாரின்  இந்தப் பாடலுக்கேற்ப நம் மனமும் மலைமேல் நம்பியை விட்டகல விருப்ப மின்றி, ஒன்றிப்போனது அவன் பாதாரவிந்தங்களில் என்றே சொல்லலாம். நீங்களும் ஒருமுறை நம்பிமலைக்குச் சென்று வாருங்கள்; மலைமேல் நம்பியின் திருவருளால் மகத்தான வாழ்வைப் பெற்று மகிழுங்கள்.

பாதங்களும் தீர்த்தங்களும்!
*******************************

மகேந்திரகிரிக்குச் செல்லும் அடியார்களில் பலர், இந்த மலைப் பகுதியில் உள்ள பாதங்களைத் தரிசிக்க விரும்புவார்கள். இங்கே, சுப்ரமணியர் பாதம், சிவனடியார் பாதம், பஞ்ச குழி, பெரிய பாதம், அகஸ்தியர் பாதம், அம்பிகை சியாமளாதேவி பாதம், அம்பிகை மனோன்மணி தாயார் பாதம், கிருஷ்ண பாதம், தாயார் பாதம் ஆகியவற்றை   மிகுந்த சிரமத்துக்கிடையே தரிசித்து வருவார்களாம் பக்தர்கள். இப்போது வனப்பகுதியில் செல்ல அனுமதி கிடைப்பதில்லை.

மேலும் இங்கு அத்தியடி தீர்த்தம், பசுபதி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், சங்கு தீர்த்தம், ரோகிணி தீர்த்தம், பார்வதி தீர்த்தம், மகேந்திர மோட்ச தீர்த்தம், நயினா அருவி, பாதானி தீர்த்தம், தேர்க்கல் தெப்ப தீர்த்தம், ராகவர் அருவி குகை தீர்த்தம், காளிகோவில் தீர்த்தம், ஆஞ்சநேயர் கோட்டை தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் உள்ளன. பஞ்சவடி என்ற ஐந்து குழிகளைவுடைய தீர்த்தமும் இங்குள்ளது.

இந்த இடத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம்   செய்தார் கள் என்றும் கூறப்படுகிறது. ஆஞ்சநேயர் கோட்டை என்ற இடம் வானரங்கள் வாழுமிடமாகக்  கருதப்படுகிறது. இவ்விடத்திலிருந்துதான் அனுமான் இலங்கைக்குச் சென்ற தாக நம்பிக்கை. அப்போது அவர் நீராடிய இடமே ‘அனுமன் தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது.

சிவனடியார் பாதம் அருகில் உள்ள பஞ்சவடிக்கு பக்கத்தில் தேவ வனம் என்ற மலர்த் தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் சித்தர்கள் மலர் பறித்து  சிவபெருமானையும், பார்வதி தேவியையும் தினசரி வழிபட்டு வருகிறார்கள் என்று ஏடுகள் கூறுகின்றன. இங்குள்ள ஒரு கல்வெட்டில் `தேவ வனம் மானுடர்கள் செல்லக் கூடாது' என்று பொறிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கவனத்துக்கு...

தற்போது இந்த இடங்களுக்குச் செல்ல இயலாது. நம்பி மலைக் கோயிலை தரிசிக்கச் செல்லலாம். ஆனால்,  பாத தரிசனம் மற்றும் சில தீர்த்தங்கள் அமைந்திருக்கும் மகேந்திர கிரியின் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல தமிழக வனத்துறை அனுமதி பெறவேண்டும். அனுமதியும் எளிதில் கிடைக்காது. அனுமதியின்றி மலைக்குள் சென்றால், 25 ரூபாய் ஆயிரம் வரை வனத்துறை அபராதம் விதிக்கும். சில தருணங்களில் சிறைத்தண்டனைக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே, வனத்துக்குள் செல்ல முயற்சி செய்யவேண்டாம்.

அதேபோல் நம்பிகோயிலுக்குச் செல்ல விரும்பும் அன்பர்கள், ஏற்கெனவே சென்று வந்த அன்பர்களின் ஆலோசனையையும், வழிகாட்டலையும் பெறுவது மிக அவசியம்.

                   - சித்தர்களின் குரல் shiva shangar