Sunday, 14 February 2016

Grapes

பசியைத்தூண்டி புத்துணர்ச்சி தரும் திராட்சை!

திராட்சை இளமையை தக்க வைத்து முதுமையை அண்டவிடாமல் பாதுகாக்கக்கூடிய அருமையான பழமாகும். குறிப்பாக, உலர்ந்த தோலுடன் எடை குறைவாக உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். சத்து நிறைந்த திராட்சை பத்திய உணவுக்கு ஏற்றது. பசியைத் தூண்டி புத்துணர்ச்சியூட்டக் கூடியது. தாகத்தை தணித்து வயிற்றெரிச்சலை கட்டுப்படுத்தக்கூடியது. செரிமானத்தை சீராக்கி வாயுப்பொருமலை போக்கக்கூடியது.

தினந்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை. திராட்சைப்பழத்தில் மாலிக், சிட்ரிக், டர்டாரிக் போன்ற அமிலங்கள் இருப்பதால் இவை ரத்தத்தில் உள்ள நச்சை  சுத்திகரித்து மலம் கழிவதற்கான பெருங்குடல் தூண்டுதலுக்கு உதவுகின்றன. இதுதவிர சிறுநீரகங்களுக்கும் பக்கபலமாக இருக்கக்கூடியது. குடல் புண் உள்ளவர்கள் தினமும் திராட்சைச்சாறு அருந்தி வந்தால், குடல்புண் குணமாவதுடன் குடல் வலிமை பெறும். மூல நோய்களை போக்கக்கூடியது.  சில நேரங்களில் சிலருக்கு உடல் முழுவதும் எரிவதுபோன்ற உணர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல், உண்மையாகவே உடம்பில் எரிச்சல் உண்டாகும். இப்படிப்பட்ட பாதிப்பு உள்ளவர்கள் தினமும் திராட்சைச்சாறு அருந்தி வந்தால் நிச்சயம் குணம் கிடைக்கும். ரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகளை  வெளியேற்றி உடம்புக்கு குளிர்ச்சி தரும் இந்த திராட்சை, வயிற்றுக்கடுப்புக்கு அருமையான மருந்தாகும். புற்றுநோயை எதிர்க்கும் மருத்துவக்குணங்கள் திராட்சைப்பழத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திராட்சையை பன்னீரில் ஊற வைத்து அதன்  சாற்றை அருந்தி வந்தால் இதயம் வலிமை பெறும். பன்னீர் திராட்சையை பாலுடன் சாப்பிட தாது பலம் பெறும். கர்ப்பிணிகளுக்கு  வரக்கூடிய வாந்தி, குமட்டல், வாய்க்கசப்பு போன்றவற்றுக்கு திராட்சை  நல்லதொரு மருந்தாகிறது.

- எம்.மரிய பெல்சின்

No comments:

Post a Comment