அலோபதி மருத்துவத்தின் பயங்கரவாதம் -
மனித குலம் தப்பிக்குமா?
டாக்டர் சாமுவேல் ஹானேமன் 1790களில்
ஹோமியோபதியை ஜெர்மனியில்
உருவாக்குகிறார். தனது மருத்துவத்தில்
உடலுக்குத் தரும் அதே முக்கியத்துவத்த
ை மனதிற்கும் கொடுக்கிறார் அவர். தனிப்பட்ட
முறையில் அவர் அந்த மருத்துவத்தை எந்த
வகையிலும் ஆன்மீகம் அல்லது மதத்துடன்
தொடர்புபடுத்தியதாகத் தெரியவில்லை.
1800களுக்கும் 1900களுக்கும் நடுவில்
உருவாகிறது அலோபதி. 1844ல் அமெரிக்கன்
இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோமியோபதி
அமைக்கப்பட்டு, திட்டமிட்ட வளர்ச்சியை
அடைய நினைக்கிறது. அதற்கு எதிராக 1848ல்
அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்
அமைக்கப்படுகிறது (அலோபதி
மருத்துவர்களால்). இதே காலகட்டத்தில் நோய்
எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாடிக்ஸ்)
கண்டுபிடிக்கப்படுகின்றன. இதனால் வேகமான
வளர்ச்சியடையும் மருந்து தயாரிப்பு
நிறுவனங்கள் விரைவிலேயே அலோபதி
மருத்துவத்தை தங்களுடைய கருவியாக
சுவீகரிக்கின்றன.
ஹோமியோபதியை ஒழிக்க
இது உதவுவதால் அலோபதி மருத்துவமும்
இந்தக் கூட்டுக்குத் தயாராகவே இருந்தது.
இந்த சதிக்கோட்பாட்டை நான் நம்புவதில்லை
என்று சொல்பவர்களுக்காக ஒரு தகவல்.
அலோபதி மருத்துவர்கள் அமெரிக்கன்
மெடிக்கல் அசோசியேஷனை அமைக்கும்போது
தங்கள் உறுப்பினர்கள் யாரும் ஹோமியோபதி
மருத்துவத்துடனோ, ஹோமியோபதி
மருத்துவர்களுடனோ எந்தத் தொடர்பும்
வைத்துக் கொள்ளக்கூடாது என்பதை ஒரு
விதியாக வைத்திருந்தார்கள். அதாவது,
தங்களுடைய மதம் மட்டுமே உண்மையானது
என்ற தட்டையான பார்வை கொண்ட ஒரு மத
நிறுவனம் என்ன செய்யுமோ அதைச்
செய்தார்கள். பிற்காலத்தில் அலோபதி
மருத்துவர்கள் உருவாக்கிய சங்கம், மருந்துக்
கம்பெனிகளின் செல்வாக்குடன் அமெரிக்காவில்
அதிகார மையமாக மாறியபோது
ஹோமியோபதி மருத்துவம்
அறிவியல்பூர்வமற்றது என்ற பிம்பம்
தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது. அலோபதி
மருத்துவர்களும் அவர்களின் தொடர்ச்சியாக
வந்திருக்கும் மருத்துவ ஆய்வு உலகமும்
இன்றளவில்கூட ஹோமியோபதியை ஒரு
அறிவியல்பூர்வமான மருத்துவமாக
அங்கீகரிப்பதில்லை.
நவீன மருத்துவம் என்று இன்று
அழைக்கப்படுகிற சிகிச்சை முறைக்கு அதன்
தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயர்
அலோபதி. ஆனால் விவரமறிந்த அலோபதி
மருத்துவர்கள் யாரும் அதை அந்தப் பெயரிட்டு
அழைப்பதை ஏற்க மாட்டார்கள். அதன் அர்த்தம்
அப்படி. ‘அலோ’ என்றால் ‘எதிர்’ என்று
அர்த்தம். ‘பதி’ என்றால் ‘நோய்’ என்று
அர்த்தம். அதாவது ஒரு நோய்க்கு நேர் எதிரான
ஒன்றைப் பயன்படுத்தி சிகிச்சை தருவது.
தலை வலிக்கிறதா? அதைவிட கடுமையான
வலியை ஏற்படுத்துகிற ஒரு களிம்பைத்
தடவினால் முடிந்துவிட்டது. மலச்சிக்கல்
ஏற்படுகிறதா? ஜீரணத்தில் ஏற்படும் பிரச்சினை
பற்றியெல்லாம் கவலை இல்லை. நேரடியாக
குதம் வழியாக மலமிழக்கியைப் புகுத்தி
விட்டால் விஷயம் முடிந்துவிட்டது. உருவான
காலத்தில் அலோபதி கொடூரமான
வழிமுறைகளில் சிகிச்சை தரும் முறையாகவே
அறியப்பட்டது. ஹோமியோபதி அதற்கு நேர்
எதிரானது.
Principe of similars என்று ஹோமியோபதியை
அழைக்கிறார்கள். நோயை உண்டாக்கும்
கிருமியேதான் அதற்கு மருந்தும்கூட. எந்தக்
கிருமி நோயை ஏற்படுத்துகிறதோ அதே
கிருமியை மிக நுண்ணிய அளவில்
உடலுக்குள் அனுப்புகிறார்கள். நோய் எதிர்ப்பு
சக்தியை உருவாக்கும் ரத்தத்தில் உள்ள
வெள்ளை அணுக்களை வீரியம் குறைவாக
உள்ள கிருமிகள் தட்டி எழுப்புகிறது.
இயற்கையாக, பக்கவிளைவுகள் இல்லாமல்
நோயை வேரோடு ஒழிக்க அல்லது நோய்
வராமலே தடுக்க இது முடிகிறது.
தத்துவார்த்தமாகப் பார்த்தால் அலோபதியும்
ஹோமியோபதியும் நேர் எதிரானவை.
அதனால் அவற்றிற்கிடையிலான போரும்
தவிர்க்க முடியாததாக மாறியது.
லோபதி தன்னைப் பகுத்தறிவுபூர்வமான
மருத்துவ முறை என்று கூறிக் கொண்டது.
தன்னை அறிவியல்பூர்வமான சிகிச்சை
என்றது. தன்னைத் தவிர அத்தனையும்
அறிவியல் இல்லை என்றும் கூறி வருகிறது.
ஹோமியோபதியை அனுபவ சிகிச்சை என்று
அழைக்கலாம். ஒரு மருந்து நோயாளியிடம்
எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை
ஆராய்ந்தறிவது அறிவியல்பூர்வமான
வழிமுறை தான். ஆனால் மருந்து
நிறுவனங்களின் சக்தியோடு புதிய
தொழில்நுட்பத்தின் வரவையும் அலோபதி
தனதாகக் கொண்டு மருத்துவத்திதற்கு
ஏகபோக உரிமை கொண்டாட ஆரம்பித்தபோது
அத்தகைய தர்க்கங்கள் எடுபடவில்லை. அந்தப்
போரில் தோற்றுப்போன ஹோமியோபதி
ஓரங்கட்டப்பட்டது. 1920களுக்குப் பிறகு
மருத்துவத்தில் புகுந்த தொழில்நுட்பத்தின்
உபயோகம் அலோபதியின் தனி ஆதிக்கத்தை
முழுமையடையச் செய்தது. மேற்குலத்தின்
ஒரே மருத்துவ முறை அலோபதி மட்டுமே
என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்ட்டது.
நானாவித சக்திகளுடனான கூட்டு மூலம்
ஹோமியோபதியின் ஆதிக்கத்தை
அலோபதியால் ஒழிக்க முடிந்ததே தவிர, அந்த
மருத்துவத்தின் தாக்கத்தையோ சாரத்தையோ
அழிக்க முடியவில்லை. கடந்த இரு
நூற்றாண்டுகளாக கொத்துக் கொத்தாக மனித
உயிர்களைப் பறித்து வந்த கொள்ளை
நோய்களை ஒழிப்பதற்கு, அறிகுறிகளை
மட்டுமே ஒழிக்கும் அலோபதி கிஞ்சித்தும்
பயன்படவில்லை. போலியோ முதல் அம்மை
நோய் வரை உலகின் மிகக் கொடிய
நோய்களுக்கு நிரந்தர தீர்வைக் கொடுக்க
அத்தனை தடுப்பூசிகளும் ஹோமியோபதி
மருத்துவ தத்துவத்தின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டவைதான்:
நோய்கிருமியையே
நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவது (தனி
நபர்களின் தேவைக்கேற்ப மருந்தின் வீரியத்தை
மாற்றியமைக்க வேண்டும் என்ற
ஹோமியோபதியின் மற்றொரு விதியையும்
பின்பற்றியிருந்தால் ஏராளமான பக்க
விளைவுகளையும் அதனால் ஏற்படும்
உயிரிழப்புகளையும் தவிர்த்திருக்கலாம்).
நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தங்கள்
பிரம்மாஸ்திரமாகக் கொண்ட அலோபதியின்
மடத்தனம் இன்று சூப்பர் பக் வரை கொண்டு
வந்து விட்டிருக்கிறது.
அலோபதி மருத்தவத்தின் பயங்கரவதம்
மேற்குலகில் ஹோமியோபதியை
ஓரங்கட்டியது போல இந்தியாவின்
ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தையும்
ஓரங்கட்ட முயற்சி செய்யாமல் இல்லை.
ஆயுர்வேததிற்கு வலுவான மருத்துவ
சிந்தனை உண்டென்றாலும் அதில்
ஆன்மீகத்திற்கும் இடமுண்டு. அதை
அறிவியல் பூர்வமற்றது என்று ஒதுக்கித்
தள்ள இதுவே வசதியாகப் போனது.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம்
கிராமங்களில் மட்டுமே உயிர் வாழ்ந்தது.
அதுவும்கூட நவீன மருத்துவர்கள்
கிராமங்களுக்குச் செல்லத் துணியாததால்
ஏற்பட்ட மறைமுகமான நன்மை இது.
அலோபதியின் பிரச்சினைகள் இப்போது
அம்பலமாகத் தொடங்கிவிட்டதால் நமது
மண்ணின் மரபுகள் மறுகண்டுபிடிப்ப
ு செய்யப்படுகின்றன. அலோபதி மருத்துவம்
வளர்த்துக் கொண்டிருக்கும் நவீன நோய்
பரிசோதனை முறைகளும் தொழில் நுட்பத்தின்
உதவியும் அவசியம்தான் என்றாலும் மிக
அரிதாகவே பிரயோகிக்கப்பட வேண்டியவை.
பணத்திற்காக அதீதமாகப் பிரயோகிக்கப்படு
கின்றன. நோயிலிருந்து விடுதலை
கிடைப்பதற்குப் பதில் அதைவிட கூடதலான
வலி வந்து சேர்கிறது.
நோய் வந்த பிறகு தலையிடுவதுதான்
அலோபதியின் ஆதாரமே என்பதால் நோய்கள்
இல்லாவிட்டால் அலோபதியும் இல்லை.
அதனால் அவர்கள் ஒருபோதும்
நோய்களிலிருந்து மனித குலத்திற்கு
விடுதலை பெற்றுத் தரப் போவதில்லை.
மாறாக, சுயமாகவே செய்துகொள்ளும்
அளவுக்குத் தன்னிறைவுக்கான சாத்தியத்தைத்
தரும் ஆயுர்வேதத்தைப் போன்ற மருத்துவ
முறைகள் நோயால் வருந்துகிறவர்களின்
எண்ணிக்கையையே குறைக்கும்
வருமுன்காப்பு அம்சத்தைக் கொண்டுள்ளன.
மூட்டுப் பிரச்சினைகளுக்கு அக்குபஞ்சர்,
ஆயுர்வேதம் போன்றவை சிறப்பாக இருக்கிறது
என்ற எண்ணம் இருக்கிறது. புற்றுநோய்
முற்றும் முன்பே கவனித்தால் செல்களின்
கட்டுப்பாடில்லா பெருக்கத்தைப் பாரம்பரிய
மருத்துவங்களில் கட்டுப்படுத்த முடியும் என
கூறப்படுகிறது. இவற்றையெல்லாம்
அறிவியலுக்கு அப்பாற்பட்டவை என்று
ஒதுக்கித் தள்ளினால் அது அலோபதியின்
சுயநல நோக்கையே காட்டும். இன்றைய நவீன
மருத்துவத்தின் சோதனை முறைகளைப்
பயன்படுத்தி யோக நிலைகளினால்
மூளையில் ஏற்படும் நல்லவிதமான
மாற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment