{ தந்திர யோக சாஸ்திரங்களில் சொல்ல பட்ட ,
நமக்கு ஏற்படும் சோர்வு ,திருஷ்டி , உடல் மன
ஆரோக்கிய பிரச்சனைகளிலேருந்து
உடனடியாக விடுபட கூடிய சித்தர்கள்
சொன்ன உடனடி பலன் கிடைக்க கூடிய எளிய
பரிகாரம். செய்து பாருங்கள் . }
தீராத பிரச்சினை காரணமாக வரும்
மனசோர்விற்க்கு எளிய தாந்த்ரீக பரிகாரம்
இன்று நம்மில் பலர் கடன் பிரச்சினை, குடும்ப
பிரச்சினை காரணமாக மனசோர்வில் தவித்து
கொண்டு இருக்கிறார்கள், அதில் இருந்து மீள
எளிய சக்தி வாய்ந்த தாந்த்ரீக பரிகாரம்.
எழுமிச்சை பழம் ஒன்றை எடுத்து கழுவி
விட்டு, காட்டன் துணியில் கிழக்கு பார்த்து
அமர்ந்து உங்கள் வலது கரத்தில் பழத்தை
வைத்து இடது கையால் அதை
மூடிக்கொண்டு கண்களை மூடி நீங்கள் எந்த
பிரச்சினையில் சிக்கி தவிக்கிறீர்களோ அந்த
பிரச்சினையில் இருந்து விடுபட்டதாக
எண்ணிக்கொண்டு உங்கள் மனதிரையில் அதை
காணுங்கள், இதை பதினைந்து நிமிடம்
நிறுத்தாமல் செய்யவும், பிறகு அந்த பழத்தை
இரண்டாக வெட்டி ஒரு பகுதியை உச்சி முதல்
பாதம் வரை தேய்த்து குளித்துவிடவும், பாதி
பழத்தை பிழிந்து சிறிதளவு நீரில் பொடி உப்பு
மற்றும் ஒரு சிட்டிக்கை மஞ்சள் தூள் கலந்து
குடித்து விடவும்,
அந்த நாளிலேயே மனசோர்வில் இருந்து
விடுபடுவீர்கள்,
இதை செய்ய குறிப்பிட்ட நாள் கிழமை நேரம்
கிடையாது.
No comments:
Post a Comment