1.
கொலஸ்ட்ரால் பிரச்னையால் அவதியா? இதை தினமும் சாப்பிடுங்க
கருவேப்பிலை என்றதுமே நம் அனைவரது நினைவுக்கும் வருவது முடி நன்றாக வளரும் என்பதே.
உணவுகளில் தினமும் பயன்படுத்தினால், பலரும் அதை சாப்பிடாமல் தூக்கி எறியத்தான் செய்வோம்.
ஆயுர்வேத மருத்துவத்தில் கூட கருவேப்பிலையை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
இதில் 63 சதவிகித நீரும், 6.1 சதவிகித புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவிகித நார்ச்சத்தும், 18.7 சதவிகித மாவுச்சத்தும் இருக்கின்றன.
சுண்ணாம்பு சத்து, மக்னீசியம், இரும்பு சத்து, தாமிர சத்து, கந்தக சத்து மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் ஆஸிட் போன்றவையும் கருவேப்பிலையில் உண்டு.
இதனை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம்.
* செரிமான பிரச்னைகளை தீர்க்கிறது கருவேப்பிலை. உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால் கொழுப்புகள் படிந்து தொப்பை ஏற்படும். எனவே கருவேப்பிலையை தினமும் காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால் கொழுப்புகளை கரைப்பதுடன், உடலின் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கிறது.
* அதுமட்டுமின்றி உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது, எனவே உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது.
* குறிப்பாக கெட்ட கொழுப்புகளை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது. கொலஸ்ட்ரால் பிரச்னையால் அவதிப்படும் நபர்கள் இதை தினமும் காலையில் உட்கொண்டு வரலாம்.
* இதில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளதால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஓக்சிஜன் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் உடலில் இரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது.
* இதில் ஆன்டி பக்டீரியா மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு பொலிவை கொடுக்கிறது, ப்ரஷ்னா கருவேப்பிலையை பேஸ்ட் செய்து, இதனுடன் மஞ்சள் சேர்த்து பருக்கள் இருந்த இடத்தில் தடவினால் பருக்கள் மறைந்துவிடும்.
* குறிப்பாக சர்க்கரை நோயால் அவதிப்படும் நபர்கள் கருவேப்பிலையை உட்கொள்ள வேண்டும், ஏனெனில் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
2.
புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/
3.
மருத்துவம் / கறிவேப்பிலை பயன்கள்
தூக்கி எறியும் கறிவேப்பிலையைக் கொண்டு உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?
அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. பலரும் கறிவேப்பிலை வெறும் சுவை மற்றும் மணத்திற்காகத் தான் சேர்க்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தவறு. கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக தூக்கி எறியும் அந்த இலையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சத்துக்கள் உள்ளதென்றால் பாருஙகள். வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! உங்களுக்கு அன்றாடம் உடலுக்கு வேண்டிய சத்துக்களைப் பெற வேண்டுமானால், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தாலே போதும். ஏனெனில் கறிவேப்பிலையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்களான ஏ, ஈ, சி மற்றும் பி போன்றவை நிறைந்துள்ளது. இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமா? பலருக்கும் கறிவேப்பிலை சாப்பிட்டால் முடி வளரும் என்று தான் தெரியும். ஆனால் கறிவேப்பிலையைக் கொண்டு பல பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணலாம். சரி, இப்போது கறிவேப்பிலையைக் கொண்டு உடல்நல பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என காண்போம்.
கறிவேப்பிலையைக் கொண்டு உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி
அசிடிட்டி அசிடிட்டி பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாற்றினைப் பருக அசிடிட்டி மற்றும் செரிமான பிரச்சனைகள் தீரும். அதற்கு கறிவேப்பிலையை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டிய அவசியமில்லை. தினமும் அதனை சிறிது வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலே போதும்.
கறிவேப்பிலையைக் கொண்டு உடல்நல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?
வயிற்று உப்புசம் வயிறு உப்புசத்துடன் இருந்தால், மோரில் கறிவேப்பிலையை அரைத்து போட்டுக் கலந்து குடித்து வர, வயிற்று உப்புசம் குறையும்.
சிறுநீரகப் பாதை பிரச்சனைகள் கறிவேப்பிலை சாற்றில் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், சிறுநீரக பாதையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.
கடுமையான நோய்த்தொற்றினால் உண்டாகும் வயிற்றுக்கடுப்பை சரிசெய்ய கறிவேப்பிலையை உட்கொண்டு வருவது நல்லது.
ஈறு பிரச்சனைகள் ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் அகல வேண்டுமெனில், கறிவேப்பிலையின் குச்சியைக் கொண்டு பற்களை துலக்கி வர வேண்டும். இதனால் ஈறுகள் வலிமையடைவதோடு, பற்களும் பளிச்சென்று மாறும்.
காலைச் சோர்வு கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வைப் போக்குவதற்கு எலுமிச்சை ஜூஸில் வெல்லம் மற்றும் சிறிது கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து குடித்து வர, காலைச் சோர்வு நீங்கும்.
நாள்பட்ட இரத்த சோகை இரத்த சோகை குணமான சுடுநீரில் அல்லது பாலில் கறிவேப்பிலை பொடி சேர்த்து கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இரத்த சர்க்கரை அளவு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க, கறிவேப்பிலை டீ உதவும். கறிவேப்பிலையில் இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கும் நார்ச்சத்து உள்ளது. எனவே அதனை டீயாகவோ அல்லது வெறும் வயிற்றில் அப்படியே பச்சையாகவோ சாப்பிட்டு வருவது நல்லது. Show Thumbnail
கருமையான முடி முடி கருமையாக வளர வேண்டுமானால், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிடுவதோடு, கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வாருங்கள்.
தொகுப்பு ;வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
No comments:
Post a Comment