#அக்குபங்சர் @
##########
அக்குபங்சர் என்றால் உடலெங்கும் ஊசிகளை செருகி சிகிட்சையளிக்கும் ஒரு மருத்துவமுறையாகவே பலரும் எண்ணிக் கொண்டுள்ளனர். அது முற்றிலும் தவறு, அக்குபங்சர் என்றால் என்ன?என்பதை பற்றி சிறிது விரிவாக பார்போம்.
அக்குபங்சரின் ஆதாராப்பூர்வமான துவக்ககாலம் சுமார் 5000வருடங்களுக்கு முற்பட்டது. ஆனால், அக்குபங்சர் சிகிட்சைக்கு உதவிய கூர்மையான பொருட்கள்(எலும்
பு,மரம்,கல்) பற்றிய ஆதாரங்கள் கிடைத்திருப்பது கி.மு.1௦௦௦ ஆண்டுகளில் தான். அக்குபங்சரின் துவக்க காலத்தில் கூர்மையான பொருட்களை சிக்ட்சைக்கு பயன்படுத்தியதாக ஆதாரங்கள் இல்லை. மேலும் சீன வரலாற்றில் உலோக பயன்பாடு என்பது கி.மு.400களில் தான்.
அக்குபங்சர் என்ற சொல் இலத்தீன் மொழியில் இருந்து ஆங்கிலமொழிக்கு சென்ற சொல் ஆகும், அக்குபங்சர் மருத்துவம் தோன்றிய சீனாவில் அது ZHEN+JIU=ZHENJIU என அழைக்கப்படுகிறது. சீன மொழி அகராதியில் ZHEN என்பது “தூண்டுவது”,”ஊக்கம் அளிப்பது”(boost) எனவும் JIU என்பது “மிகச் சரியான”(exactly)எனவும், ஆக zhenju என்பது “மிகச்சரியான தூண்டுதல்” என்பதை குறிக்கிறது.
இதில் ஊசி என்ற பொருளோ குத்துதல் என்ற செயலோ குறிப்பிடப்படவி
ல்லை,
ACUPUNCTURE என்ற இலத்தீன் மொழிச் சொல்லை ACUITUS+PUNCTURA என பிரிக்கும்போது “ACUITUS” என்பது சரியான எண்ணத்தையும்(Sharpness of Thought), “PUNCTURA” என்பது தூண்டுதல் என்பதையும் குறிக்கிறது. எனவே அக்குபங்சர் என்பதற்கு “சரியான தூண்டுதல்” என்பதே சரியான விளக்கமாகும்.
அக்குபங்சர் மருத்துவத்தின் பிறப்பிடம் சீனா என்பதை சீன இலக்கியங்கள் நிரூபிக்கின்றன, 8000வருடங்களுக்கு முன்பு மஞ்சள் நதிக்கரையில் வாழ்ந்த FKU-HSI என்பவர் யின்-யாங் தத்துவத்தை ஐ-சிங் என்ற நூலில் விளக்கி எழுதினார்.இது அக்குபங்சர் மருத்துவத்தின் தத்துவ நூலாக சீன வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
கி.மு.1000 தில் வாழ்ந்த ஷாங்(SHONG) வம்சத்தினர் அக்குபங்சர் புள்ளிகளை தூண்டுவதற்கு எலும்புகளையும், கற்களையும், மரத் துண்டுகளையும் பயன்படுத்த தொடங்கினர்.கி.மு 421-221 காலத்தில் சீனாவில் உலோகங்கள் பயன்பாடு தொடங்கியது. அதன் பின்பே புள்ளிகளை தூண்டுவதற்கு தங்கம்,வெள்ளி மற்றும் பிற உலோகங்களால் ஆன ஊசிகள் பயன்பாட்டிற்கு வந்தன.
கி.பி.1568-1644 காலகட்டங்களில் சீன மருத்துவங்களின் தலைமை மருத்துவமாக அக்குபங்சர் விளங்கியது. மூலிகை மருத்துவமும்,இயற்கை அடிப்படையிலான பிற மருத்துவங்களும் சீன மக்களால் பயன்படுத்தப்பட்டன. கி.பி.1644-1840 காலங்களில் நடைபெற்ற “ஓபியம் போர்கள்”-ஐ தொடர்ந்து தனி மருத்துவ முறையாக இருந்த மூலிகை மருத்துவம் அக்கு பங்சர் மருத்துவத்தோடு சேர்த்து செய்யப்பட்டது.
19ம் நூற்றான்டின் துவக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார தாழ்வுநிலையும், சீரற்ற அரசுகளால் ஏற்பட்ட பாதிப்புகளும், சீனாவை பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்றன. அக்குபங்சரும்-மூலிகை மருத்துவமும் பின்னடைவைச் சந்தித்தன.அப்போதுதான் பரவி வந்த நவீன மருத்துவமுறையும் போதுமானதாக இல்லை. கி.பி1949ம் ஆண்டு சீன மக்களின் துயரங்கள் முடிவு பெற்றது. “மக்கள் சீனம்” என்ற மக்களாட்சியை சீன கம்யூனிச அரசு ஏற்படுத்தியது.
அக்குபங்சரின் பயன்பாட்டையும் –சீன பொருளாதாரத்திற்கு அது ஆற்ற வேண்டிய பங்கையும் உணர்ந்த சீன தலைவர் மா-சே-துங் அக்குபங்சரை நாடு முழுவதும் கற்பிக்கவும், அரசு மருத்துவமனைகளில் விரிவுபடுத்தவும் 1950ல் உத்தரவிட்டார்.
மீண்டும் அக்குபங்சர் சீனா முழுவதும் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால்,அக்கு பங்சர் மருத்துவத்தோடு ஆங்கில மருத்துவத்தை இணைத்து செய்யும் தவறும் துவங்கியது.
தத்துவங்களில் நேரெதிரான இரு மருத்துவங்களும் கலக்கப்பட்டது. அக்குபங்சர்,மூலிகை மருத்துவம்,ஆங்கில மருத்துவம் ஆகிய மூன்று முறைகளையும் இணைத்து பயிற்சியளிக்கும் புதிய முறை துவக்கப்பட்டது.
இப்பயிற்சியின் மூலம் அக்குபங்சரின் பெயர் உலகம் முழுவதும் பரவினாலும், மருத்துவங்களை கலந்து செய்யும் குழப்பங்களும் இதன் மூலம் பரவியது. இன்றைய அக்குபங்சர் மருத்துவ குழப்பங்களுக்கு அடிப்படை காரணம் இதுவேயாகும்.
மூலிகை மருத்துவத்தோடும், ஆங்கில மருத்துவத்தோடும் கலந்திருந்த சீன அக்குபங்சர் ஒவ்வொரு நாடுகளுக்கு பரவும்போதும் புதிய சிகிட்சை முறைகளோடு இணைத்து செய்யப்பட்டது. வணிக ரீதியில் மக்களின் பணத்தை சுரண்டுவதற்காக புதிய புதிய கருவிகளும்,முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டு சீன அக்குபங்சரோடு இணைக்கப்பட்டன. யூக கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் சிகிட்சை முறைகளை மாற்றி, பலவகையான உபகரணங்களின் துணையோடு, ஆங்கில மருத்துவ அடிப்படையில் (கண்ணிற்கு தெரிந்தவற்றை மட்டுமே நம்பும்) கூறப்படும் உடல் இயங்கியல்(Physiology), நோய்க்காரணிகள்(Pathology) போன்ற நவீன கோட்பாடுகளை கொண்டதாக சீன அக்குபங்சர் மாற்றம் பெற்றது.
ஒரு நோய் ஏற்பட்டால் அதற்க்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, அதனை நீக்க வேண்டும் என்று அக்குபங்சரின் அடிப்படை தத்துவங்கள் கூறும் நிலையில், நோயின் மூல காரணம் பற்றிய கவலையே இல்லாமல் நோய்க்குறிகள் வெளிப்படும் இடத்தில் சிகிட்சையை மேற்கொள்ள ஆரம்பித்தது சீன அக்குபங்சர். அக்குபங்சரின் அடிப்படை தத்துவங்களிலிருந்து வேரறுக்கப்பட்ட இந்த நிலையில்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உலக சுகாதார நிறுவனத்தின்(W.
H.O) மூலமாக இலங்கை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது சீன அக்குபங்சர்......
இந்திய அக்கு பங்சர்
---------------------
1980களில் சீன அக்குபங்சர் சிகிட்சை அளிக்கும் மருத்துவர்கள் இந்தியாவில் ஆங்காங்கே இருந்தனர். பிற மருத்துவ முறைகளுடன் இணைத்தும், வலி நிவாரணதிற்கும் அக்குபங்சர் மருத்துவம் பயன்பாட்டில் இருந்தது. அக்கு பங்சரின் அடிப்படை தத்துவங்களின் அடிப்படையில் சிகிட்சை அளிக்கும் மருத்துவர்கள் யாரும் இல்லை.
அக்கு பங்சரின் மரபு வழிப் பரிசோதனை முறைகளும், தொன்மையான எளிய சிகிட்சை முறைகளும் மறைந்து, பத்து-இருபது ஊசிகளும்,மின் கருவிகளும் பயன்படுத்தும் குழப்பமான முறைகளும் இந்தியா முழுக்க பரவியிருந்தது. இந்த சுழலில்தான் “டாக்டர் சகோதரர்கள்” என அழைக்கப்பெறும் டாக்டர்.பஸ்லுர் ரஹ்மான், டாக்டர்.சித்திக் ஜமால் ஆகியோரின் வருகை நிகழ்ந்தது.
1979ல் தங்களுடைய ஆங்கில மருத்துவப்படிப்
பை முடித்த டாக்டர் சகோதரர்கள் 1984-ல் மனித குலத்தின் சாபக் கேடான ஆங்கில மருத்துவத்தை துறந்து அக்கு பங்சர் சிகிச்சையை ஆரம்பித்தனர்.சாதாரண வலிகளுக்கான சிகிட்சை முறையாக அக்காலத்தில் அக்குபங்சர் முறை இருந்தது. ஒரே ஒரு புள்ளியை தூண்டுவதன் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களைக் களைய முடியும் என்ற மாஸ்டர். உ வே பிங்(அக்குபங்சரின் தந்தை) அவர்களின் கூற்றின் மூலம் உந்துதல் பெற்று, ஊசி அல்லது கைவிரலால் தொடுவதன் மூலம் அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடும் முழுமையான மருத்துவ முறையாக அறிமுகம் செய்தார், “இந்திய அக்குபங்சரின் தந்தை” டாக்டர் பஸ்லூர் ரஹ்மான்.
ஏற்கனவே வழக்கத்தில் இருந்த சீன அக்குபங்சர் முறைக்கும், டாக்டர் பஸ்லூர் ரஹ்மான் அறிமுகம் செய்த புதிய அக்குபங்சர் முறைக்கும் ஏராளமான வேறுபாடுகள் தத்துவ ரீதியிலும், வெளிப்படையாகவும் காணப்பட்டன. புதிய அக்குபங்சர் முறையில் தத்துவ அடிப்படையிலான முறையான நாடிப்பரிசோதனையும்,ஒரே ஒரு புள்ளியில் சிகிட்சையளிக்கத் தக்க புள்ளியை தேர்வு செய்யும் முறையும், எந்த விதமான மருந்துகளை பரிந்துரைக்காத தன்மையும், இந்திய தத்துவ மரபு அடிப்படையிலான கழிவு நீக்க தத்துவமும் உள்ளடக்கிய இந்திய அக்குபங்சர், எல்லாவிதமான நோய்களையும் களையும் என்பதை டாக்டர் பஸ்லூர் ரஹ்மான் தன்னுடைய ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளை கொண்டு நீருபித்தார்.
சீனாவில் தோன்றி,சீனாவிலேயே அழிந்து போன அக்குபங்சரின் தனித்தன்மையை, இந்தியாவில் டாக்டர் சகோதரர்கள் மீட்டெடுத்தனர். அவர்களிடம் மருத்துவம் பயின்ற பல மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் இந்திய அக்குபங்சர் முறையை பின்பற்றி வருகின்றனர். டாக்டர் சகோதரர்களால் பயிற்றுவிக்கப்பட்டு தற்காலத்தில் பின்பற்றப்பட்டு வரும் தூய அக்குபங்சர் முறையை “இந்திய அக்குபங்சர்” என்ற பெயரால் அழைக்கிறோம்.
“இந்திய அக்குபங்சர்” என்றால் இந்தியர்கள் உபயோகிக்கும் அக்குபங்சர் அல்ல, இயற்கை சார்ந்த பல இயற்கை கோட்பாடுகளை உலகிற்கு உரைத்த இந்திய மரபுவழி தத்துவங்களின் அடிப்படையில் உடலை புரிந்து கொண்டு செய்யப்படும் மருத்துவம் “இந்திய அக்குபங்சர்” ஆகும்.
இந்திய அக்கு பங்சரின் அடிப்படை தத்துவகள் மூன்று ஆகும்
1.கழிவு நீக்க தத்துவம்
2.பஞ்சபூத தத்துவம்
3.கரு-உரு தத்துவம்
எல்லா மருத்துவங்களும் மருத்துவம் என்பதை பொதுவாக மூன்று பகுதிகளாக பிரிக்கிறது.
1.நோய்
2.நோய் காரணம்
3.நோய் களைவதற்கான சிகிட்சை
மேற்ச் சொன்ன இரண்டிற்கும் எதோ இணைப்பு இருப்பது போல உங்கள் உள்உணர்வு உணர்துகிறதா? உண்மை உணர்வில்தானே உள்ளது!. உணர்வில் இருங்கள் ்,ண்பர்களே!
(கழிவு நீக்க தத்துவம் - நோய்
பஞ்சபூத தத்துவம் – நோய் காரணம்
கரு-உரு தத்துவம் – நோய் களைவதற்கான சிகிட்சை )
No comments:
Post a Comment