#நோய் #என்பது #கற்பனை!
#####################
மனித உடல் எப்போதுமே தவறு செய்வதில்லை என்றால், இன்று உலக மக்களின் நோய்கள் எங்கிருந்து வந்தன?
அவை அனைத்தும் நம் விதி மீறல்களின் விளைவு!
அப்படியானால் நாம் இந்த விதிகளை மீறுவதை நம் உடல் வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறதா? அல்லது எச்சரிக்கை செய்கிறதா?
மிகக் கடுமையான எச்சரிக்கைகளை நம் உடல் நமக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் நாம் கண்டு கொள்வதில்லை.
ஆரோக்கியமான மனித உடலின் ஆற்றல் இயக்கம், செரிப்பு, சீரமைப்பு ... என மூன்று விதங்களில் செயல்படுவதை நாம் அறிந்தோம். இந்த ஆற்றல் பங்கீட்டில் நம் விதி மீறல்கள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
பசி இருக்கும் போது உண்ண வேண்டிய உணவை, பசியற்ற நிலையில் தினமும் உண்டு வருகிறார் ஒருவர். இப்படி தினமும் செரிப்பு நடவடிக்கையைப் பற்றி துளியளவும் கவலையின்றி, அவரின் உடலுக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்கிறார்.
அவரது உடல் தேங்கும் கழிவுகளை நீக்க நேரமின்றி, மீண்டும் மீண்டும் வயிற்றில் விழும் உணவுகளை வெளித்தள்ளும் வேலையை மட்டுமே செய்து வருகிறது.
கழிவுகள் மிக அதிக அளவில் தேங்கி, உடலின் குறைந்த பட்ச பணிகளையே செய்ய தடை ஏற்படுகிறது. (இப்போது உடல் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.)
நம் உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கழிவுகள் தேங்கலாம். எந்த வகையான கழிவுகளாகவும் இருக்கலாம்.
காற்றுக்கழிவு, மலக்கழிவு, சளிக்கழிவு, நீர்க்கழிவு, என எவ்வகைக் கழிவானாலும் சரி, அதை தேக்கமுற்ற பகுதியிலிருந்து வெளியேற்ற உடல் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
ஒரு இடத்திலிருந்து கழிவை வெளியேற்ற சராசரி வெப்ப சக்தியை விட சற்று உயர்வான வெப்பம் தேவைப்படுகிறது.
எங்கோ ஒரு உறுப்பில் தேங்கிய கழிவுகளை வெளியேற்ற உடல் முழுவதும் சீரான வெப்ப நிலை உயர்வு தூண்டப்பட்டு காய்ச்சலாக வெளிப்படுகிறது.
இப்போது காய்ச்சல் என்பது நோயா? அல்லது கழிவுகளை வெளியேற்றும் நடவடிக்கையா?
கழிவுகளை வெளியேற்ற ஏற்பட்ட காய்ச்சல் நம் உடல் ஆற்றல் பகிர்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நம் உடலால் பெறப்பட்ட ஆற்றல் இயக்கம், செரிமானம், சீரமைப்பு ஆகியவற்றுக்கு சமமாகப் பிரித்துப் பயன்படுத்தப்படுகிறது.
சாதாரணமான உடல் நிலையில் உணவு, காற்றின் மூலம் உடல் பெறும் ஆற்றல் 99% என வைத்துக் கொள்ளலாம்.
அதில் இயக்கத்திற்கு 33%, செரிமானத்திற்கு 33%, சீரமைப்பிற்கு 33% என ஆற்றல் பங்கீடு நிகழ்கிறது.
கழிவு வெளியேற்றம் பின்வரும் முறைகளில் நிகழ்கிறது.
நிலை 1:
உடலில் தேங்கியுள்ள கழிவின் அளவு மற்றும் தன்மை 33% க்கு உட்பட்டதாக இருக்குமானால், அன்றாடம் உடலால் ஒதுக்கப்படும் சீரமைப்பு சக்தி (நோய் எதிர்ப்பு சக்தி)யே போதுமானது. தன் 33% சதவீதத்திற்கு உட்பட்ட கழிவுகளை நாம் எதையும் அறியாவண்ணம் சீரமைப்பு சக்தி உடலிலிருந்து அகற்றுகிறது.
நமக்கு எப்போதாவது ஏற்படும் தலைவலி, வயிற்று வலி, லேசான சூடு இன்னும் ஏதோ செய்வது போன்ற உணர்வு இவைகள் இவ்வகைக் கழிவு வெளியேற்றத்தின் அறிகுறிகள். இந்த தொந்தரவுகள் தானே தோன்றி தானே மறைகின்றன. நம் அனைவருக்கும் இவ்வுணர்வுகளின் அனுபவமிருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியின் வரம்புக்குட்பட்ட பராமரிப்பு வேலை என்பதால், இந்நிலையில் காய்ச்சல் தோன்றாது அல்லது வெளிப்படாது.
நிலை 2 :
கழிவுகளின் அளவு மற்றும் தன்மை 50% ஆக இருக்கு மானால், நோய் எதிர்ப்பு சக்தி காய்ச்சலை வெளிப்படுத்துகிறது.
இப்போது காய்ச்சல் என்பது உடலின் ஆற்றல் பகிர்வுக்கு உடலாலேயே ஏற்படுத்தப்பட்ட அவசரத் தடையாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி தன்னுடைய பங்கீடான 33% சதவீதத்தை செலவழித்த நிலையில், அடுத்த இயக்கமான செரிமானத்தை துணைக்கு அழைக்கிறது. செரிமான சக்தியின் ஆற்றல் பங்கீடான 33% சதமும் நோய் எதிர்ப்பு சக்தியாக மாற்றம் பெறுகிறது.
உடலின் உள்ளே நிகழும் இந்த ஆற்றல் மாறுபாடு நமக்கும் உடலால் அறிவிக்கப்படுகிறது.
செரிமான இயக்கம் நோயெதிர்ப்பு இயக்கமாக உருமாறியுள்ள நிலையில் பசி முற்றிலுமாக குறைந்து போகும்.
செரிமானத்தின் முக்கியப் பகுதியான பசியும், தாகமும் குறைவதன் மூலம் ஜீரண மண்டலத்தில் செலவாக வேண்டிய சக்தியை எதிர்ப்பு சக்தியாக மாற்றியமைக்க உடலால் முடிகிறது.
காய்ச்சல் அதிகமுள்ள நபருக்கு பசியும், தாகமும் தானாகவே காணாமல் போகிறது. ஏனெனில் உடலின் அதிமுக்கிய இயக்கமான வெளித்தள்ளும் இயக்கம் (Dissimilation) நடைபெறும்போது, உட்கிரகிக்கும் இயக்கம் (Aissimilation) நடைபெறாது. இது உடலின் இயல்பு.
மேற்கண்ட வெளிப்பாடுகளின் மூலம் உடல் நமக்கு ஆற்றல் பகிர்வு மாற்றத்தை உணர்த்துவது உண்மை தானே?
நிலை 3 :
நோய் எதிர்ப்பு சக்தியின் சுய பங்கிடான 33% மும், செரிமான சக்தியின் 33% மும் இணைந்து கழிவுகளை வெளியேற்ற முயல்கிறது. இந்நிலையில் பசி தாகமற்ற உணர்வு வெளிப்படுவதை அறிந்தோம்.
இவ்விரண்டு சக்திகளை விட கழிவுகளின் அளவு மற்றும் தன்மை அதிகமானதாக இருந்தால் உடல் என்ன செய்யும்?
கடைசியாய் உடலில் எஞ்சியுள்ள இயக்க சக்தியின் ஒரு பகுதியை நோயெதிர்ப்பு சக்தியாக மாற்றுகிறது.
ஏன் ஒரு பகுதியை மட்டும் மாற்றுகிறது? ஏனென்றால், உடலின் அனிச்சை இயக்கங்களான சுவாசம், இதயத்துடிப்பு, உள்ளுறுப்பு இயக்கங்கள் உயிரைப் பாதுகாப்பதற்கு அவசியமல்லவா?
எனவே, இந்த அத்தியாவசிய இயக்கங்களுக்கான சக்தியை மட்டும் விட்டு, விட்டு எஞ்சிய ஆற்றலை நோயெதிர்ப்பு சக்தியாக மாற்றுகிறது.
இயக்க சக்தியின் இம்மாறுதலால் உடலின் புற இயக்கங்கள் நின்று போகின்றன.
நம்மால் நடக்கவும், பேசவும், இயங்கவும் முடியாது.
காய்ச்சலின் உச்சகட்டத்தில் இந்நிலையை நாம் உணர முடியும். கழிவு வெளியேற்றப் போராட்டம் இன்னும் தொடருமானால் நோயாளி மயக்க நிலையில் ஆகிவிடுவார். அல்லது கோமா எனப்படும் ஆழ்மயக்க நிலைக்குச் செல்வார்.
கழிவு வெளியேற்றம் படிப்படியாக நிகழும் போது இயக்க சக்தியும். பின்பு செரிமான சக்தியும் தன் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
கண் விழிக்கும் நோயாளிக்கு மெதுமெதுவாக புற இயக்கங்கள் நடைபெற உடலின் அனுமதி கிடைக்கும்.
முழுமையான இயக்கம் மீண்ட பின்பு, முதலில் தாகமும் தொடர்ந்து பசியும் தோன்றி உடலின் முழுமையான வெற்றியை நமக்கு அறிவிக்கிறது.
படிப்படியாக உடலின் உட்புறம் நிகழும் செயல்களை நாம் உணரும் வண்ணம் அறிவிப்பதே உடலின் தலையாய வேலையாகும்.
உயிரைப் போக்கும்! கழிவின் தேக்கம
கழிவுகளின் தேக்கம் என்று ஒற்றை வார்த்தையில் கூறி விடுவது சுலபமானது தான்.
ஆனால், கழிவுகளின் தேக்கத்தால் அது தோற்றுவிக்கும் விளைவுகள் சுலபமானதல்ல;
உலகில் நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எல்லா நோய்களுக்கும் கழிவுகள் மட்டுமே காரணமாகும். அதன் தன்மையும், அளவும் தொந்தரவின் வேகத்தை தீர்மானிக்கிறது. அது தேங்கியிருக்கும் இடம் பெயரையும் பாதிப்பையும் முடிவு செய்கிறது.
உதாரணமாக இருமல் (Cough) என்ற நோயை கவனிப்போம்.
இந்த இருமல் என்பது என்ன? ஏன் ஏற்படுகிறது?
நுரையீரலின் இயக்கக் குறைவு காரணமாக அவற்றில் தேங்கியிருக்கும் சளிக்கழிவை வெளியேற்றும் முயற்சிதான் இருமல்!
சளி எப்படி நுரையீரலில் தேங்கியது?
• நுரையீரலுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் புகைப் பழக்கம் அதன் இயக்கக் குறைவிற்கு காரணமாகலாம்.
• உடல் ஏற்றுக் கொள்ள முடியாத குளிர் தன்மையில் சாப்பிட்ட உணவால் நுரையீரல் பலவீனமடையலாம்.
• நம்மால் செரிக்கவே முடியாத கடினப் பொருளான பாலை அதிக அளவில் பயன்படுத்துவதால் நுரையீரலின் சக்தி குறையலாம்.
• அன்றாடம் வெளியேற்றப்படாத மலக்குடல் கழிவுகள் நுரையீரலின் பணியை பாதிக்கலாம்.
• பசியற்றிருக்கும் போது உண்ணும் உணவு காற்றுக் கழிவாக மாற்றப்பட்டு, நுரையீரலை வந்தடையலாம்.
…இப்படி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அடிப்படை ஒன்று தான்.
நம் இயற்கை விதி மீறிய செயல்களால் நுரையீரல் பாதிப்படைந்து தன் தலையாய கடமையான கழிவுகளை வெளியேற்ற முடியாமல் திணறுகிறது.
இந்நிலையில் போதிய எதிர்ப்பு சக்தி உடலிற்கு கிடைக்கும்போது அது தன் வேலைக்குத் திரும்புகிறது. காய்ச்சப்படாத தூய தண்ணிரை அருந்தும் போது, நல்ல பழங்களை உண்ணும் போது, துய்மையான நீரான மழையில் முழுவதுமாக நனையும் போது உடல் பூரண எதிர்ப்பு சக்தியைப் பெறுகிறது.
எங்கெல்லாம் கழிவுத் தேக்கம் உள்ளதோ அதை நீக்க முயல்கிறது.
இப்படி எதிர்ப்பு சக்தி வலுவடையும் போது, நுரையீரல் தன் சளிக் கழிவை வெளியேற்ற முயலும்.
எப்படி வெளியேற்றும்?
சிறு குழந்தைகளாக இருந்தால் நுரையீரலின் சளி வாந்தி மூலமாகவும், மலம் மூலமாகவும் சிறிது சிறிதாக வெளியேறும். சளியின் அளவு அதிகமென்றால், இருமலைத் தோற்றுவித்து அதன் மூலம் வெளியேறும்.
பெரியவர்களுக்கு வாந்தி மூலமும், மலம் மூலமும் சளி வெளியேறுவது குறைவு. எனவே தான் இருமல் மூலம் வெளியேற்றுகிறது உடல்.
நுரையீரலில் தேங்கிய சளி உள்ளேயே இருப்பது நல்லதா? அல்லது வெளியேற்றப்படுவது நல்லதா?
கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டியவை. அவை உடலிலேயே தங்க நேரிட்டால் ஒவ்வொரு உறுப்பையும், அதன் இயக்கத்தையும் பாதிக்கும்.
நாம் இருமலைத் தான் நோயாக கற்பனை செய்கிறோம். இன்னும், வெளியேற வேண்டிய சளியை, இருமலை அடக்குவதன் மூலம் பாதுகாக்க முயற்சிக்கிறோம்.
நாம் ஒன்றும் செய்யாமலிருந்தால், சளி தானாகவே இருமல் மூலம் வெளியேறி விடும். பின்பு இருமல் குறைந்து நுரையீரல் தன்னிலைக்குத் திரும்பும்.
ஆனால் நாம் சும்மா இருப்பதில்லை!
ரசாயன மருந்துகளைக் கொண்டு இருமலை அடக்குகிறோம்.
என்ன செய்கின்றன இந்த மருந்துகள்?
நுரையீரலில் திரவ வடிவில் வெளியேறத் தயாராக இருக்கும் சளியை இந்த ரசாயன மருந்துகள் வெப்பத்தை ஏற்படுத்தி உலரச் செய்கிறது. திரவ வடிவச் சளி இப்போது காய்ந்து விடுவதால் இருமல் வறட்டு இருமலாக மாறுகிறது.
"சளி நின்றுவிட்டது" என்று நாம் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து வெப்பத்தை ஏற்படுத்தும் மருந்துகளால் காய்ந்த சளி துகள்களாக (Powder) பொடியாக்கப்பட்டு நுரையீரலின் நுண் துளைகளில் படிய வைக்கப்படுகிறது.
சளி தற்காலிகமாக உருவ மாற்றம் அடைந்து விடுவதால் ஒன்றிரண்டு நாட்களில் இருமல் முற்றிலும் நின்று போய் விடுகிறது.
இது தான் நாம் மேற்கொள்ளும் சிகிச்சையின் விளைவு.
அப்படியானால், காய்ந்து, உறைந்து போன சளி என்னவாகும்?
பத்திரமாக உடலிலியே தங்கியிருக்கும். எப்போது வரை?
எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வரை.
நாம் சளிக்காகச் சாப்பிட்ட ரசாயன மருந்துகளை உடல் முதலில் வெளியேற்றி எஞ்சிய நச்சுக்களை கல்லீரலின் துணை கொண்டு சேமிக்கிறது.
படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் உடல், நல்ல உணவு, நல்ல நீர், சக்தியுள்ள பழங்கள் போன்றவற்றிலிருந்து ஆற்றலை உள்வாங்கி மீண்டும் எதிர்ப்பு சக்தியைத் தயார் செய்கிறது.
இப்படி எதிர்ப்பு சக்தி தயாராவதற்கு ஒரு வாரம் முதல் பல ஆண்டுகள் வரை கூட ஆகலாம். மீண்டும் கழிவு வெளியேற்றப் பணி துவங்குகிறது.
முன்பாவது, சளியை வெளியேற்றும் வேலை மட்டும் தான் இருந்தது. இப்போதோ நுரையீரலின் நுண்துளைகளில் அடைத்துக் கொண்டுள்ள உலர்ந்த துகள்களை ஈரப்படுத்தி பின்பு சளியாக மாற்றி வெளியேற்ற வேண்டியிருக்கிறது.
இப்போதுதான் இருமலோடு நெஞ்சு எரிச்சல், சளியோடு ரத்தத்துகள் வருதல் போன்றவை ஏற்படும். ரசாயனத்திற்கு பின்பான இந்தக் கழிவு வெளியேற்றம் முன்பை விட கடுமையானதாகவும் பலமானதாகவும் இருக்கும்.
இப்போது நாம் புதிதாக சளிப்பிடித்துக் கொண்டதாகக் கூறுகிறோம். மழையில் நனைவதாலோ பழங்கள் சாப்பிடுவதாலோ அல்லது காய்ச்சாத நல்ல நீர் குடிப்பதாலோ சளி பிடிப்பதில்லை. ஏற்கனவே நம் முயற்சியால் உடலில் அடைத்து வைக்கப்பட்ட அதே சளி மீண்டும் வெளியேறுகிறது என்பதை நாம் உணர்வதில்லை.
இப்போதும் இருமலை நிறுத்த எல்லா வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். மருந்துகளால் சளியை காய்ந்த துகள்களாக்கி நுரையீரலில் மீண்டும் சேமித்து வைக்கிறோம்.
இதே நிலை தொடரும் போது குழந்தைகளுக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ் (முதல்நிலை சளி?) ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு காச நோய் (Tuberculosis), ஆஸ்துமா (Asthma), ஈசினோபிலியா (Eosinophilia), போன்ற இரண்டாம் கட்ட முற்றிய நோய்களாக மாறிவிடுகிறது.
தும்மலை அடக்குவோமானால் சைனஸ் உருவாகிறது. நிரந்தரத் தலைவலி, காரணமற்ற மைக்ரேன் தலைவலி, ஒற்றைத் தலைவலி
... என அனைத்தும் ஒவ்வொன்றாய் ஏற்படுகிறது.
இன்னும் அடுத்தடுத்த நிலைகளில் தோல் வழியாக செதில்படை நோய் (Eczema), செதில் உதிர்தல் (Psoriasis), படர்தாமரை (Ringworm) போன்ற வெளிப்பாடுகளும் நிகழ ஆரம்பிக்கும்.
இவை அனைத்துமே எதிலிருந்து தோன்றியது?
1. இயற்கை விதி மீறல்
2. உறுப்புக்களின் இயக்க குறைவு
3. கழிவுகளின் தேக்கம்
4. மருந்துகளால் கழிவுகளை அடைத்து வைத்தல்
5. ரசாயனங்களால் கழிவுகளை உருமாற்றுதல்
... போன்ற தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் நமக்கு நாமே நோய்களை சம்பாதித்துக் கொள்கிறோம்!
இயற்கை விதி மீறலை சரி செய்ய முயற்சி செய்யும் உடலை நாம் தொடர்ந்து தொல்லைக்குள்ளாக்குகிறோம். நாம் என்ன செய்தாலும் உடல் ஒன்றை மட்டுமே செய்து வருகிறது.
அது தான் கழிவு வெளியேற்றச் செயல்!
உடல் எப்போதுமே கடமை தவறுவதில்லை.
மனித வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கும், நோய்களுக்கும் காரணம் அவனது உயிரில் உள்ள புரோகிராம் செய்யப்பட்ட நல்ல / பாவ பதிவுகளே காரணம் என நமது சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர்.
ஒரு கம்ப்யூட்டர் செயல்பட நம்மால் செய்யப்பட்ட புரோகிராம் செய்த சாப்ட்வேர்கள் அதில் பதியப்பட்டு அது எப்படி இயங்குகின்றதோ அதுபோல நமது வாழ்க்கை செயல்பட நம்மால் செய்யப்பட்ட வினைப்பதிவுகளே (புரோகிராம்களே) நம்முள் பதியப்பட்டு நாம் இயங்க காரணம் ஆகின்றது.
அதுபோல வியாதி என்பது செல்களில் உள்ள டி.என்.ஏ வில் உள்ளது.
அது கண்ணுக்கும், புறக்கருவிக்கும் எப்போதும் தெரியாது.
அதில் ஒன்று எழுந்தாலும், உயிரில் காட்டும்.
அது கண்ணுக்கும், கருவிக்கும், தெரியாது,
அந்த ஒன்றை வைத்து குறி மூலம் ஆன்மா பாதிப்பை உணர்ந்துக் கொள்ள முடியும், அந்த குறியை வைத்து தான் வியாதியை கண்டுபிடிக்கணும். ஏனென்றால் ஆன்மாவிற்கு வேறு வழியில்லை.
ஆகவே தான் அந்த குறிக்கு தக்க மருந்துகளை மருத்துவர்களின் அனுபவத்தில் நோய்க்குறிகளுக்கு ஏற்றவாறு கொடுக்க வந்த நோய் தற்காலிகமாக போய் விடும்.
(நிச்சயமாக நிரந்தர தீர்வு இருக்காது, ஏனெனில், நமது உயிரில் உள்ள தேவையற்ற பதிவுகளை நீக்காமல் முழுவதுமாக நோயிலிருந்தோ, துன்பத்திலிருந்தோ விடுதலை பெறமுடியாது.)
இப்போதும், மியாசம் (பாவப்பதிவுகள் அல்லது நோய்) உறக்கத்துக்கு பழைய படி சென்று விடும்.
ஆகவே ஆன்மா கண்ணுக்கு தெரியாது.
அதை காக்கும் சக்தி வைட்டல் போர்ஸ், அதை தாக்கும் மியாசம் (நோய்) இவை எப்போதும் கண்ணுக்கும், கருவிக்கும் தெரியாது.
இப்படி இதனை தனது அறிவாற்றலால் ஜெர்மனியில் பிறந்த ஆங்கில மருத்துவம் பயின்று அதில் MD பட்டம் பெற்ற மருத்துவர், அதை துறந்து ஹோமியோபதி மருத்துவத்தினை தோற்றுவித்த மருத்துவர் ஹானிமேன் ஆவார், மருத்துவர் ஹானிமன் இதை தான் உன்னிப்பாக கவனித்து பார்த்தார்.
நோய் தானாகவே குணமாகும் இயற்கை விந்தையை கண்டு முதலில் அதிர்ந்து போனார். பிறகு மகிழ்ந்து இயற்கைக்கு நன்றி செலுத்தினார்.
ஆகவே வந்த நோய்கள் அதன் கெடு காலம் முடிந்து தானாகவே தணிந்திருக்கா விட்டால் மனித இனமே (அ) உயிரினமே அழிந்து போய் இருக்குமே?
ஆஹா என்ன இயற்கையின் பெருங்கருணை என்று வியந்து மகிழ்ந்து நெகிழ்ந்து போனார்.
இதனால் தான் அவருக்கு கொடுக்கப்பட்ட துன்பங்கள் அவரை பாதிக்க வில்லை என்று தெரிகிறது அல்லவா?
இது போல் நமது நாட்டில் தோன்றிய ஞானிகள் பிரம்ம இரகசியத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
மற்றும் நம்மை காக்கும் அந்த பரம்பொருளை, தெய்வீக சக்தியைப் பற்றி திருமூலர் அவர்கள் பசு, பதி, பாசம் என்கிறார்.
ஆதிசங்கரர் அத்வைதம் என்றும்,
ஒளவையார் பரமாய சக்தி என்றும்,
இயேசு கர்த்தர் அல்லது யெகோவா என்றும்,
நபிகள் அல்லா என்றும்,
வைணவம் விஷ்ணு என்றும்,
சைவம் சிவம் என்றும்,
வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி என்றும்,
வேதாத்திரி மகரிஷி அவர்கள் சுத்த வெளி என்றும்,
கூறி இவை எல்லாமே ஒரே பொருளை ( அதாவது அந்த பரம்பொருளை) தான் தருகிறது. என்பதனை நாம் அறியவேண்டும்.
ஆகவே இந்த அபூர்வ சக்தியை தான் மருத்துவ மாமேதை ஹானிமேன் அவர்கள் ”வைட்டல் போர்ஸ்” என்று கூறுகிறார்.
வேதங்களின் உட்பொருளும், இதையே தான் இறைவன் என்று கூறுகிறது.
ஆகவே மருத்துவர் ஹானிமேன் அவர்களும், தனது கண்டுபிடிப்பான ஹோமியோபதியின் அடிப்படைக் கருத்தாக இதனைத் தான் சொல்லுகின்றார்.
அதாவது இறைவனுடைய சக்தி உடலுக்குள் இயங்கும் போது அதே சக்தியை தான் துவைதம் என்கிறார்.
இந்த இடத்தில் மகான்கள் கூறும் போது “அவனில் தான் நீ, உன்னில் தான் அவன்” என்கிறார்கள்.
இதே பொருளை தான் மற்றவர்களும்,
ஆத்மா, ஆன்மா, பதி, பெருமாள், அடியார், உயிர், மனம், புத்தி, அகங்காரம், சித்தம், ஆனந்தம், உள்ளம் என்று பல பெயர்களில் கூறுகின்ற இப்பொருளை உடலுக்குள் இருக்கும் உயிர் சக்தியை ஜீவாத்மாவை கடவுள் என்றும் கூறலாம்.
இப்படி ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறு அல்ல, அது எங்கும் எதிலும் நிறைந்துள்ள பரம அணு என்றும், அந்த அணுவே பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும், இந்த உயிர்களின் தோற்றத்திற்கும் காரணமாக மாறி உடலை இயக்குகின்றது.
அப்புறம் ஏன் இந்த உடலானது துன்பப்பட வேண்டும்?.
பிறவியின் போது அந்த ஆத்மா தனது நல்வினை, தீவினைகளை மீண்டும் தனது ஸ்தூல தேகத்தில் கொண்டுவந்து, அது தூண்டப்பட்டு அனுபவிக்க வேண்டும், என்ற காரணத்தினால் உடலை எடுத்து இயங்கும் போது (வாழும் போது) இயக்கத்தின் காரணமாக பிறருக்கு சில கஷ்டங்கள் நேர்ந்து விடுகிறது.
அந்த கஷ்டத்தின் வருத்தம் அவர்களின் வினையின் (செயலின்) அடிப்படையில் குறிப்பிட்ட அவரையே வந்து சேர்கின்றது.
இது அவரது உயிரணுவில் பதிந்து விடுகிறது.
எப்படி பதிகின்றது என்றால் எல்லாமே அலை இயக்கம் தானே, அதாவது நவீன கருவிகளான ஒவ்வொன்றும், (ரேடியோ, செல்போன் போன்றவைகள்) எப்படி அலைவரிசையில் பதிவு செய்கின்றதோ அப்படியே!
அந்த அணுதானே உடலையும் இயக்குகின்றது.
இப்போது தேகம் அதன் செயலால் ( வினையால்) நல்லதையும், தீயதையும் செய்ய செய்ய அது பதிவுகளாக உயிரில் அதாவது உயிர்செல்லில் (உயிரணுவில்) பதிவாகின்றது.
இந்த பதிவுகள் கண்களுக்கும், கருவிகளுக்கும் தெரியுமா? யோசியுங்கள்..
தெரியாது? ஏன் என்றால் பஞ்ச பூதங்களான மண், நீர், நெருப்பு, காற்று என்ற இந்த நான்கில் தான் கண்களால் பார்பதனையும், கருவிகளால் நோயையும் கண்டு பிடிக்க முயற்சி செய்ய முடியும்.
ஆனால், ஐந்தாம் பூதமான விண், அதில் செய்ய முடியாது. இதை ஞானிகளால் உணர்ந்து கூறத்தான் முடியும்.
விண்ணிலும், ஒரு வலிமையான மகா சக்தி தான் வான் சக்தி என்ற அந்த பிரபஞ்ச சக்தி.
உடலெங்கும், இயங்குகின்ற அணுக்களின் கூட்டங்களே தனது உயிரணுவில் அதாவது உயிர்செல்லில் அந்த நல்ல மற்றும் பாவ பதிவுகளாக சேகரிக்கின்றது.
இதில் எத்தனை பதிவுகள் பதியும் என்றால், பல கோடான, கோடியான பதிவுகள் பதியும்.
ஓர் அறிவு முதல் 6 அறிவு வரை நமது பல பிறவிகளில் செய்த இடையூறுகள், நம் முன்னோர்கள் செய்த இடையூறுகள், நம் உயிர் செல்லில் பதிந்துள்ளன.
இது எவ்வளவு பதிந்தாலும், கணக்காகாது,
இவை நிழல் விண்ணால் ஆனது.
ஓர் உடல் வயதாகியோ, இடைப்பட்ட காலத்தில் உயிர் விலகி விட்டாலோ அந்த உடல் மட்டுமே மண்ணாகவோ, சாம்பலாகவோ போகும்.
அந்த உயிர் என்ற உயிரணு மீண்டும் ஓர் உடலை எடுத்து கொள்கிறது.
இப்போது நாம் செய்த வினையும், இதற்கு முன்பு நாம் செய்த வினையும் அந்த உயிரணுவின் டி.என்.ஏ வில் பதிந்து கொண்டே வரும்.
இதனை சமஸ்கிருதத்தில் சஞ்சித கர்மம், பிராரப்த கருமம் என்றும்,
தமிழர்கள் பழைய வினை, புதிய வினை என்றும் கூறுகிறோம்.
இப்போது கவனித்து பாருங்கள் உடலை இயக்கிக் கொண்டிருப்பது, உயிர் என்ற அந்த பேரணு ஆகும்.
இந்த சக்தி கண்ணுக்கு தெரியாது. கண்ணுக்கு தெரியாத சூட்சும வடிவம் கொண்ட இந்த உயிரை எது தடை செய்யமுடியும்.
இருப்பினும் இந்த உடல் பல செல்களின் கூட்டமைப்பை கொண்டுள்ளதால் பாவப்பதிவுகளை அந்த செல்கள் நோய்களாக அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது
அது எந்த உடல் உறுப்புகளை பாதிக்கின்றதோ, அது தான் வியாதி அல்லது நோய் என்கிறோம்.
அலோபதி மருத்துவம் உடலை மட்டுமே பார்கின்றது.
அதை துல்லியமாக பார்க்க கருவியின் உதவியையும் தேடுகிறது.
ஆனால் இங்கு நன்கு சிந்தித்து பாருங்கள். உடலையே இயக்குவது உயிர்.
அதை தடைசெய்வது மியாசம் என்ற பாவம் அதாவது நமது வினை.
ஆகவே, நாம் நமது வினைப்பதிவுகளை நீக்காமல் நோயிலிருந்து முழுவதுமாக குணமாக முடியாது. அந்த வினைப்பதிவுகளை குணமாக்கும் சூட்சமத்தை சித்தர்களும், ஞானிகளும் அறிந்து செயல்பட்டனர்.
நாம் அதனை அறியாமல் மனம் போன போக்கில் கண்டதை தின்று, கண்டபடி செயல்களில் ஈடுபட்டு வினையை பெருக்கி உணினை உருக்காமல் அதற்குள் சென்று பதிவை நீக்க முடியாது.
அந்த பதிவுகளை நீக்காமல் அதாவது மியாசத்தை போக்காமல் நோய் குணமாகாது என ஹோமியோபதி மருத்துவம் சொல்கின்றது.
இதையும், மனதால் தான் உணர்ந்து கொண்டு மருந்து கொடுக்க முடியும்.
இதை அலோபதி மருத்துவம் ஏற்றுக் கொள்வதில்லை.
காரணம் அலோபதி மருத்துவத்தில் சாட்சி, தடயம், உருவமும் தேவை,
ஆனால் எந்த காலத்திலும், நமது ஊனக்கண்களாலும், நமது கண்டுபிடிப்பான புறக்கருவிகளாலும் தேகத்தில் உள்ள உயிரணுவில் உள்ள பாவப்பதிவுகளை கண்டுபிடித்து நோயை குணமாக்கவே இயலாது, தற்காலிகமாக அதனை அடக்கலாமேயொழிய, முழுமையாக குணமாக்க இயலாது.
எனவே உயிரைக்காணவும், அதில் உள்ள பதிவுகளை நீக்கவும் நாம் எந்த கருவிகள் தான் செய்ய முடியும்?
யோசியுங்கள், மனிதனுக்கே கொடுக்கப்பட்ட ஆறாவது அறிவை வைத்து நன்றாக யோசியுங்கள்.
இது கற்பனைக்கெட்டாத பதிவு... மருத்துவத்தின், வாழ்க்கையில் சூட்சுமத்தை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள்....நன்றி....
ReplyDelete