நினைவுத்திறனை அதிகப்படுத்தும் மிக இலகுவான ஹாக்கினி யோக முத்திரை:
*********************************************************************************************
(பல ஆண்டுகளுக்கு முன்னர் மறந்த
விஷயங்களையும் நினைவுக்கு கொண்டு வர முடியும் !)
பிறக்கும் போது எல்லா குழந்தைகளுக்கும்
மூளை அளவு ஒன்றாகவே உள்ளது.
ஓரவஞ்சனைகளின்றி, இயற்கை (இறைவன்)
படைக்கும்போது அனைவருக்கும் ஒரே
மாதிரியான மூளையைத்தான் தருகிறது.
ஆனால் வளர, வளர, ஒவ்வொரு குழந்தையின்
அறிவுத் திறனிலும் வேறுபாடுகள் ஏற்படத்
துவங்குகிறது. பெரும்பாலான குழந்தைகளும்
சராசரி அறிவுள்ளவர்களாகவே
உருவாகிறார்கள். சில குழந்தைகள்
அடிமக்குகளாகவும், சில குழந்தைகள்
அதிபுத்திசாலிகளாகவும் மாறுகிறார்கள்.
*வளரும் சூழ்நிலை
*சமுதாயச் சூழல்
*மதம்
*பெற்றோர்கள்
*ஆசிரியர்கள்
*குடும்பத்தின் உணவுப் பழக்க வழக்கங்கள்
என இந்த வேறுபாட்டிற்கு பல காரண
காரியங்களை விஞ்ஞானம் கூறினாலும், மிக
முக்கியமான அடிப்படையான காரணம்
மூளையின் செயல்பாடுகளில் உள்ள
வித்தியாசம்தான்!
பிறக்கும்போது மூளையின் அளவு ஒன்றுதான்
என்றாலும், அந்த மூளையை நாம் எப்படிப்
பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே
நமது அறிவுத்திறன் அமைகிறது.
"ஜீனியஸ்கள் உருவாக்கப் படுவதில்லை;
அவர்கள் பிறக்கிறார்கள்" என்றொரு ஆங்கிலப்
பழமொழி உண்டு. இந்தப் பழமொழியில்
பாதிதான் உண்மை உள்ளது. பல ஜீனியஸ்கள்
பிறக்கும்போதே அத்தகைய தன்மைகளுடன்
பிறந்திருக்கிறார்கள் என்பது உண்மையே.
ஆனால் 'உருவாக்கப் படுவதில்லை' என்பது
தவறு.
முயற்சி செய்தால் எவரும் தமது
அறிவுத்தினை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஒரு ஜீனியஸாக உருவாகலாம். உங்கள்
குழந்தைகளையும் கூட ஜீனியஸ்களாக
உருவாக்க முடியும். அதற்கான தந்திர யோக
வழிமுறைகளை இந்த தொடர் உங்களுக்கு
கற்றுதர இருக்கிறது.
முதலில் 'ஜீனியஸ்' என்றால் என்ன? தமிழில்
'மேதாவிகள்' 'அதிபுத்திசாலிகள்' என்று
கூறலாம். சாதாரண மனிதர்களைவிட
முற்றிலும் மாறுபட்ட புதிய சிந்தனைகளை
உடையவர்கள், புதிய கோணங்களில்
சிந்தித்துச் செயலாற்றுபவர்களையே நாம்
மேதாவிகள் எனக் கொண்டாடுகிறோம்.
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்,
பல ஜீனியஸ்களைப் பற்றிய குறிப்புகளைக்
காணமுடியும். தொன்மையாக காலத்தில்-
அரிஸ்டாட்டில், பிளைட்டோ,
ஹிப்போகிரேட்டஸ், சுஷ்ருதா, வாழ்மீகி,
காளிதாஸ் என பல உதாரணங்களைக் கூறலாம்.
இடைப்பட்ட காலத்தில் மக்கேல் ஆஞ்செலோ,
கலிலியோ, நியூட்டன், ஆரிய பட்டர், தாமஸ்
ஆல்வா எடிசன், ஷேக்ஸ்பியர் என ஒரு நீண்ட
பட்டியலே உள்ளது.
நவீன கால ஜீனியஸ்கள் என காரல் மார்க்ஸ்,
ராமானுஜம், பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப், ஸ்டீபன்
ஹாக்கிங் என்று பலர் கொண்டாடப்
படுகின்றனர்.
இத்தகைய சிந்தனையாளர்களே மனித
சமுதாயத்தையும், நாகரிகத்தையும்
செழுமைப் படுத்தியவர்கள். வரலாற்றின்
போக்கை மாற்றியமைத்தவர்கள். இத்தகைய
அதிமேதாவிகளுக்கும், சாதாரண
மனிதர்களுக்கும் மூளையின் அளவில்
ஏதேனும் வேறுபாடுகள் உள்ளதா? இல்லை.
பல ஜினியஸ்களின் மூளையை (அவர்கள்
இறந்த பின்னர்) விஞ்ஞானிகள் ஆராய்ந்து
பார்த்தனர். மூளையின் எடையில் எந்த
வித்தியாசமும் இல்லை. சில மேதாவிகளின்
மூளையில் மட்டும் மேற்புற மடிப்புகளின்
எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
சிலர் மட்டும் ஜீனியஸ்களாக இருப்பதன் மர்மம்
என்ன? இந்தக் கேள்விக்கான விடையை நவீன
விஞ்ஞானம் கண்டுபிடித்து விட்டது!
மூளையின் செயல்பாடுகளில்தான்
வித்தியாசம் உள்ளது. அது என்ன?
மனித மூளையை பெருமூளை சிறுமூளை,
அடிமூளை என மூன்று பகுதிகளாகப்
பிரிக்கலாம். இதில் பெருமூளையே அளவில்
பெரியது. நமது சிந்தனை, செயல்பாடுகள்
அனைத்தையும் கட்டுப்படுத்துவதும்
செயல்படுத்துவதும் பெருமூளையே,
வெளித் தோற்றத்திற்கு இந்தப் பெருமூளை
ஒரே உறுப்பு போன்று தோன்றினாலும் இது
இரு பகுதிகளைக் கொண்டது. வலது-இடது
இந்த இரு மூளைகளும் நரம்புத் திசுக்களால்
ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்
பட்டுள்ளது.
வலது மூளைக்கு என சில குறிப்பிட்ட
பணிகளும் திறமைகளும் உள்ளன. இடது
மூளைக்கும் வேறு பணிகளும் திறமைகளும்
உள்ளன.
இடது மூளையின் செயல்பாடுகள்.
************************************
*எண்கள், கணிதம், கணக்கிடுதல், எண்ணுதல்
என எண்கள் சம்பந்தமான அனைத்தும்
செயல்பாடுகள்.
*எழுத்து, மொழி, பேச்சு ஆகிய அனைத்தும்
செயல்கள்.
*ஆராய்தல், ஏன், எதற்கு, எப்படி என
பிரச்சினையை அலசி ஆராய்ந்து
முடிவெடுப்பது.
*பகுத்தாய்வு, காரண, காரியங்களை அலசி
முடிவெடுக்கும் திறமை.
*லாஜிக், ஒரு செயல் சரியா, தவறா?
சாத்தியமா, இல்லையா என லாஜிக்காக
சிந்தித்து முடிவெப்பதும் இடது மூளையே.
மொத்தத்தில் கணிதம், மொழி,
விஞ்ஞானப்பூர்வமான சிந்தனை ஆகிய
அனைத்தும் இடது மூளையின்
செயல்களாகும்.
வலது மூளையின் செயல்பாடுகள்.
************************************
*இசையை ரசிப்பது, ராகங்களை அடையாளம்
கண்டு கொள்வது, ஸ்வரங்களைக்
கோர்வையாக்கி இசையை உருவாக்குவது.
*வண்ணங்களை உணர்ந்து கொள்வது, ஒரு
வண்ணத்திற்கும் மற்றொரு வண்ணத்திற்கும்
இடையிலான வித்தியாசங்களைக் கண்டு
கொள்வது, ஓவியங்களை ரசிப்பது, ஓவியங்கள்
வரைவது.
*பரிமாணங்களை (dimensions) உணர்ந்து
கொள்வது வலது மூளைதான். இடது
மூளைக்கு நீளம், அகலம் ஆகிய இரு
பரிமாணங்களே தெரியும். முப்பரிமாணத்தை
உணர்வது, நாம் இருக்கும் பரிமாணத்தை
நமக்கு உணர்த்துவதும் வலது மூளையே.
*கற்பனை வளம், படைப்பத் திறன் வலது
மூளையின் செயல்.
*நுண்கலைகளும் (Fine Arts) வலது
மூளையின் செயல். வலது மூளையின்
ஆதிக்கம் அதிகம் உள்ளவர்களே கலைகளில்
பரிணமிக்க முடியும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பக்க
மூளைதான் அதிக ஆதிக்கம் செலுத்தும்,
சாதாரணமாக 99.9 சதவிகித மக்களும் இடது
மூளையின் ஆதிக்கத்தில்தான் வாழுகிறார்கள்.
வெகு அரிதாக சிலருக்கு மட்டுமே வலது
மூளை ஆதிக்கம் செலுத்தும். அவர்களே
மாபெரும் சிந்தனை வாதிகளாகவும்,
கலைஞர்களாகவும் பல சாதனைகளைப்
புரிகிறார்கள். இவர்கள் கோடியில் ஒருவர்
என்று சொல்லும்படியான
எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
இரண்டு மூளையும் சேர்ந்து இயங்கினால்:
***********************************************
இடது மூளையின் ஆதிக்கத்தில் ஒரு செயலை
நீங்கள் செய்து கொண்டிருக்கும் போது
திடீரென தொலைவில் உங்களுக்குப் பிடித்த
பாடல் ஒலித்தால் சில நிமிடங்கள் மற்ற
அனைத்தையும் மறந்து விட்டு, அந்தப்
பாடலிலேயே மனம் முழுவதுமாக ஒன்றிப்
போகிறதல்லவா? அந்த சில நிமிடங்களில்
இடது மூளையின் செயல்பாடு அடங்கிப்போய்,
வலது மூளையின் முழு ஆதிக்கத்தின்கீழ்
வந்துவிடுகிறீர்கள். 'பாடலைக் கேட்டு
மெய்மறந்து போனேன்' என்பது இடது
மூளையின் ஆதிக்கத்திலிருந்து
விடுபடுவதுதான்.
கையில் ஒரு கதைப் புத்தகம்
கிடைத்துவிட்டால் போதும்; உலகமே
மறந்துபோகும் என்று சிலரைப் பற்றி குறை
கூறுவார்கள். இவ்வாறு உலகமே மறந்து
போவதும், புத்தகத்தில் வரும்
காதாபாத்திரங்களோடு ஒன்றிப்போவதும்
வலது மூளையின் செயல்பாடுகளே.
இதில் பிரச்சனை என்னவென்றால்,
சாதாரணமாக அனைவருக்குமே ஒரு நேரத்தில்
ஒரு பக்க மூளை மட்டுமே ஆதிக்கம்
செலுத்தும். இரண்டு மூளையும் எந்த
வேளையிலும் ஒன்றாக இணைந்து
செயல்படுவதில்லை.
இரண்டு மூளையும் ஒரே நேரத்தில்
இணைந்து செயலாற்றினால் என்ன நிகழும்?
கற்பனை செய்து பாருங்கள்.
இரண்டு மூளையும் இணைந்து செயல்படும்
போதுதான் உங்களது கற்பனை வளமும்,
படைப்பாற்றலும் பல மடங்கு பெருகும்.
இரண்டு மூளைகளும் இணைந்து செயல்பட
தந்திர யோகத்தில் ஒரு எளிய வழிமுறை
உள்ளது. உங்களது குழந்தைக்கு முதலில்
அந்த வழியை கற்றுக்கொடுங்கள்.
ஹாக்கினி முத்திரை
***********************
வலது மூளை- இடது மூளை இரண்டையும்
தூண்டிவிட்டு, ஒரே நேரத்தில் அவற்றை
இணைந்து இயங்க வைக்கும் ஒரு எளிய தந்திர
யோக வழியே ஹாக்கினி முத்திரையாகும்.
செய்முறை:
**************
*இரண்டு கைகளின் அனைத்து விரல்களையும்
அகல விரித்துக் கொள்ளுங்கள்.
*வலது கையின் விரல் நுனிகளால் இடது
கையின் விரல் நுனிகளைத் தொடவும்.
*சற்ற தொட்டுக் கொண்டிருந்தால் போதும்.
அழுத்தம் வேண்டாம்.
*கைகளை நெஞ்சுக்கு அருகில் வைத்துக்
கொள்ளுங்கள்.
*சுவாசம் இயல்பாகவும் சீராகவும்
இருக்கட்டும்.
*முழுக் கவனமும் செய்யும் முத்திரையின்
மீது குவிந்திருக்கட்டும்.
அமரும் முறை:
*****************
¤ இந்த முத்திரையை எந்த நிலையில்
வேண்டுமானாலும் செய்யலாம்.
¤தரையில் அல்லது படுக்கையில் அமர்ந்து
கொண்டு செய்யலாம். கால்களை மடக்கி
சம்மணமிட்டு அமர்ந்து செய்யலாம்.
¤பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.
¤மாணவர்கள் படிக்கத் துவங்கும் முன்,
நாற்காலியில் அமர்ந்தபடியே சில நிமிடங்கள்
இந்த முத்திரையைச் செய்துவிட்டு
படிக்கலாம்.
¤நாற்காலியில் அமர்ந்து செய்வதானால், கால்
பாதங்கள் இரண்டும் தரையைத் தொட்டுக்
கொண்டிருக்க வேண்டும்.
¤நின்றபடியும் செய்யலாம்.
¤எந்த நிலையில் செய்தாலும் முதுகும்
கழுத்தும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.
எவ்வளவு நேரம் செய்வது?
****************************
^ஒரு வேளையில் ஐந்து நிமிடங்கள் மட்டும்
செய்தால் போதும்.
^மாணவர்கள் தினசரி நான்கு முறை (காலை,
மதியம், மாலை, இரவு) வரையில் செய்யலாம்.
பலன்கள்:
***********
~நினைவாற்றல் பல மடங்கு அதிகரிக்கும்.
~இந்த முத்திரையைச் செய்துவிட்டு படிக்கத்
துவங்கினால், படித்தவை அப்படியே மனதில்
தங்கும். எளிதில் புரியும்.
~மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்
போது ஒரு கேள்விக்கான பதில் மறந்து
போனால், உடனே இந்த முத்திரையைச்
செய்தால் அது நினைவுக்கு வந்துவிடும்.
குறிப்பு:
*********
ஆறு வயதிற்கு மேற்பட்ட அனைவருமே இந்த
முத்திரையைச் செய்யலாம்.
ஆறு வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் மட்டும்
செய்யக் கூடாது.
No comments:
Post a Comment