Sunday, 31 July 2016

Food adulteration~ addrss

இவ்வளவு நாட்களா சமையல் எண்ணைகளில் தான் கலப்படம் என்றால் துவரம்பருப்பு, மிளகு, ஜீரகம், சோம்பு, கடலைப்பருப்பு, பாசிபருப்பு, வெந்தயம், பொட்டுக்கடலை, பச்சரிசிமாவு, கடலை மாவு, கடுகு, குண்டுவெல்லம், மல்லி, பட்டை, மைதா ஆகியவைகளிலும் கலப்படமா?..
https://www.facebook.com/groups/info.thagaval.

ஒரு லிட்டர் நல்லெண்ணை தயாரிக்க 3 கிலோ எள் தேவைப்படுகிறது. எள் விளைச்சலே இல்லையென்றாலும், நல்லெண்ணை விலை அதிகரிப்பதில்லை. கலப்படம் இல்லாத பொருட்கள் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்கும் நிலை தற்போது தமிழ்நாட்டில் நிலவிவருகிறது. நல்லெண்ணையில் மட்டும் தான் கலப்படமா?. இல்லை, நம் அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளப்படும் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம். நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே கலப்படம் செய்த உணவுப்பொருட்களை உட்கொள்வதால் தான். நம் முன்னோர்கள், சமையல் பொருட்களின் விளம்பரத்தை பார்த்து கலப்பட பொருட்களை வாங்கியதில்லை. இன்றும் நோயின்றி 60 வருடத்திற்கு மேல் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் நிறுவனங்கள், அந்தப் பணத்தை நம்மிடம் தானே சம்பாதிப்பார்கள். அதற்காக பொருட்களில் கலப்படம் செய்ய வேண்டும் அல்லது விலையை உயர்த்த வேண்டும். விலை அதிகமாக இருந்தால், நம் மக்கள் வாங்க மாட்டார்கள் என்பதால் கலப்படம் செய்து விலையை குறைத்து சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள். பொருட்கள் தரமானதாக இருக்கும் பட்சத்தில் விளம்பரம் செய்யவேண்டிய அவசியம் இல்லையே?. கலப்பட உணவு சம்பந்தப்பட்ட ஒரு ஆய்வுக்கு சென்றுள்ள போது இரண்டு சகோதரர்களை சந்தித்தோம். பல ஆண்டுகளாக கலப்பட உணவு பொருட்களுக்கு எதிராக போராடிவரும் அந்த சகோதரர்கள். பல ஊர்களுக்குச் சென்று கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை வாங்கி வந்து அவர்களது மளிகை மண்டியில் விற்பனை செய்துவருகிறார்கள். அவர்களது மண்டியில் இருப்பது அனைத்தும் கலப்படம் இல்லாத உணவுபொருட்கள் என்பது தான் மிகவும் ஆச்சரியப் பட வேண்டிய விஷயம். திருமண விசேஷத்திற்கும் இவரிடம் வந்து Wholesale விலையில் மக்கள் வாங்கிச்செல்கிறார்கள். அந்த சகோதரர்கள் யார்?. ஈரோடு மாவட்டத்தில் சிறகுகளாய் பறந்துவரும் இளைஞர்களில் இவர்களும் ஒன்று. ஞாயிறுதோறும் மரம் வளர்ப்பது, மற்ற கிழமைகளில் கலப்படத்திற்கு எதிராக போராடுவது என்று வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள் ஈரோடு விமல் கருப்பண்ணன் மற்றும் கோகுல் கருப்பண்ணன்.. இவர்களின் சமூகப்பணிக்காக, பல விருதுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த பொருட்களில் என்ன கலப்படம்?

இந்தியாவில் துவரம்பருப்பு அதிகமாக விளையும் மாநிலங்கள் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா மற்றும் தமிழ்நாடு. இதில் அதிக சுவை கொண்ட துவரம்பருப்பு விளையும் பிறப்பிடமான குல்பர்க், பிதார் நகரங்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. துவரம் பருப்பில் கண்டுபிடிக்க முடியாத அளவில் கலப்படம் உள்ளது. வாட்டர் பாலிஷ், ஆயில் வாட்டர் பாலிஷ், எல்லோ கலர் ஆயில் பாலிஷ், மசூர் துவரம்பருப்பு சன்னம் மிக்சிங் உடன் வாட்டர் ஆயில் பாலிஷ் ஆகியவைகளை துவரம் பருப்பில் கலப்படம் செய்து விற்பனை செய்துவருகிறார்களாம். துவரம் பருப்பை பார்க்க பளிச்சென்று இருந்தால், நிச்சயம் பாலிஷ் செய்யப்பட்டது தான். கெமிக்கல் பாலிஷ் செய்தால் பருப்பு பளிச்சென்றும், எடையும் அதிகரிக்கும். இதுபோன்று மிளகு, ஜீரகம், சோம்பு, கடலைப்பருப்பு, பாசிபருப்பு, வெந்தயம், பொட்டுக்கடலை, பச்சரிசிமாவு, கடலை மாவு, கடுகு, குண்டுவெல்லம், மல்லி, பட்டை, மைதா என பல உணவுப்பொருட்களிலும் கலப்படம்.

கலப்படம் இல்லாத பொருட்களை எப்படி கண்டுபிடிப்பது?

கலப்படமில்லாத உணவுப் பொருட்களை விட 2 ரூபாயிலிருந்து 5 ரூபாய் குறைவாக இருக்கும். பார்க்கும் போது பாலிஷ் செய்தது போல் பளிச்சென்று இருக்கும்.

கலப்படம் இல்லாத பொருட்கள் எங்கு இருக்கிறது?.

குழந்தைக்கு கலப்படம் இல்லாத உணவுகளை கொடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் மிகவும் சிரமம் என்று பல கடைகளை தேடினேன். 30 சதவீகித கடைகளில் கலப்படம் இல்லாத பொருட்கள் விற்கிறார்கள். 70 சதவீகித கடைகளில் குறைந்த விலையில் இருக்கும் பாக்கெட் பொருட்களை விற்கிறார்கள். உதாரணமாக, கலப்படம் இல்லாத பச்சைப்பயிர் 50 ரூபாய் என்றால், கலப்படம் செய்த பயிர் 42 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த விலையைப் பார்த்து வாங்கினால், எதிர்காலத்தில் வட்டி போட்டு மருத்துவமனையில் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.

முகவரி: ஸ்ரீ கோகுலகண்ணன் ஸ்டோர்ஸ் மளிகை மண்டி, 132 புது மஜீத் வீதி, கிருஷ்ணா தியேட்டர் எதிர்புற ரோடு, ஈரோடு.
விமல்- 9786669999,
கோகுல்- 9786609999.
https://www.facebook.com/groups/info.thagaval

No comments:

Post a Comment