Friday, 15 April 2016

Salt

1980 ஆரம்பமாயிற்று அயோடின் கலந்த உப்பு சாப்பிடாததே தைராய்டு நோய்க்கு காரணம் என அரசாங்கம் ஊடகங்கள் வழியாக கூக்குரல் இட்டது ஏதோ மக்கள் நலன் சார்ந்து இல்லை அது ஒரு சில மருந்துகம்பெனி முதலாளிகளின் நலனுக்காக என்பதை இப்போது உணரலாம்

1980 களின் துவக்கத்தில் இந்தியாவில் தைராய்டு குறைபாடுகள் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவு,அயோடின் கலந்த உப்பை உண்ட இந்திய மக்களுக்கு 40% வரை தைராய்டு குறைபாடுகள் இன்று,ஆண் பெண் பேதமின்றி, உப்பிலிருந்த சத்துக்களை பிரித்து அயோடின் கலந்த உப்பை கொடுத்து மக்களை நோயாளிகளாக்கி...

அரசாங்கம் என்பது மக்கள் நலன் சார்ந்தது இல்லை அது தனியார் முதலாளிகள் நலன் சார்ந்தவை என்பது இதிலிருந்தே அறிந்து கொள்ளலாம்

சுத்திகரிக்கபடாத கல் உப்பை பயன்படுத்துங்கள் குறைவான அளவில் மேலும் இரும்பு சட்டியில் உப்பை வருத்து பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் .

உப்பிலிருந்து தான் வேதியியல் என்கின்ற விஞ்ஞானம் தொடக்கம் பெருகிறது

"உப்பை கட்டதெரியாதவன் துப்பு கெட்டவன்"என்ற சொல் வழக்கு உண்டு சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவனுக்கு அரிச்சுவடி அதாவது உப்பிலிருக்கும் குளோரைடு நீக்கி(Na+) ஆக உருவாக்குவது என்பதையே அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தேவர்களும் அசூரர்களும் பால்கடலை கடைந்து 'தேவாமிர்தம்' எடுத்தனர் என்பதன் உட்கரு இது வாக தான் இருக்க கூடும் மண் மலை களிலிருந்து அடித்து கொண்டு கடலில் சேர்க்கபடும் கடல் நீரில் சுமார் 350 வேதியியல் சேர்மானங்கள் உள்ளது என்று சித்தர்களின் பாடல்களில் உள்ளதை உற்று நோக்கினால் அந்த வேதியியல் அணுக்களை அயனிகளாக மாற்றி உடலுக்கு எடுத்து கொண்டதையே பால் கடலை கடைந்து தேவாமிர்தம் என்ற கற்பமருந்தாக கருதியிருக்க்கூடும், உப்பில் அவ்வளவு உலோகங்கள் அணு வடிவில் உள்ளது அதை அயனியாக்க மாற்றியதையே"தேவாமிர்தம்" என் கருதுகிறேன் இது என்னோட கருத்து

உப்பும் தமிழர் பண்பாட்டு கூறுகளும்

1.செய்த வேளைக்கு மாற்றாக நெல்லும்(சம்பாநெல்)உப்பும்(அளத்தில் விளைந்தது) கொடுத்த வழகத்தினால் தான்'சம்பளம்' என்ற சொல் பிறந்தது
salt என்கின்ற சொல்லில் இருந்து ஆங்கிலத்தில் Salary என்ற சொல் பிறந்தது.
2. உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாயாகவும் கருதபடுகிறது "உப்பிட்டவரை உள்ளவும் நினை" என்பது உப்பு நியாபகத்தின் குறியீடாகவும் , நன்றி மறந்ததை காட்டும் வழக்கு மொழி . நவீன அறிவியல் மூளையின் வளர்ச்சிக்கு உப்பில் உள்ள சோடியம் பொட்டாசியம் அவசியம் என கருதுவது உப்பின் தன்மையை தான் .
3. உப்பு உறவின் நீட்சியாக கருதுவதுண்டு இறந்தவருக்கு பத்தாவது நாள் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கமானது இறந்தவரின் தொடர்பை அறுத்து கொள்ளவே இதை செய்கின்றனர் .
4. மதுரை மாவட்ட கள்ளர் இனத்தின் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய்யும் போது மணமகன் வீட்டில் இருந்து உப்பும் அரிசியையும் கொண்டு செல்லும் வழக்கம் உண்டு

உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மையுடையதால் மரவை எனப்படும் மரச்சட்டியிலும்,கல்மரவை எனப்படும் மாக்கால் சட்டியிலும் பயன் படுத்தும் வழக்கம் உண்டு.
உப்பு என்ற தமிழ்சொல்லுக்கு 'சுவை' என்பதே முதல் பொருள் இனிப்பு, கசப்பு,துவர்ப்பு என்ற சுவைகளெல்லாம் உப்பை அடிப்படையாக கொண்டே பிறந்தவை
இது போல உப்புடன் தொடர்புடைய பல தரவுகளை மேற்கோள் காட்டலாம்
-Chellam Selva

பின்னூட்டம்(FeedBack)
Kanagaraj Easwaran உப்பு மாற்றுவது என்ற சடங்கு திருமணம் உறுதியாவதைக்குறிக்க எமது கொங்கு நாட்டிலும் உண்டு.

அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்தால் அயோடின் பற்றாக்குறை அதிகமாகிறது. சரியாவதில்லை என்பதே உண்மை. இதைப்பிரச்சாரம் செய்வது அலோபதி டாக்டர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் உப்பு மிகத்தப்பு. அதை சாப்பிடவேண்டிய அவசியம் மனிதனுக்கு இல்லை. இயற்கையாக பச்சையாகப்பழங்களை காய்கறிகளை சாப்பிட்டால் அவற்றில் உள்ள உப்புக்களே போதும்.

உப்பு அமிர்தம் என்பது அபத்தம். லவனம் எனப்படும் உப்பு அசுரத்தன்மையே கொண்டது. உப்புதான் சிலேத்துமம் என்னும் சளியைக்கெட்டி செய்து படிப்படியாக மனிதனைக்கொல்லுகிறது. அமிர்தம் என்பது தேன் ஆகும். உப்பு சாப்பிடாமல் இயற்கை உணவுகளை உண்டால் பாம்பு கடித்தால் கூட விஷம் ஏறுவதில்லை என்று இயற்கை மருத்துவர் தேங்காய் பழ சாமியார் இராமகிருஷ்ணன்(சிவசைலம்) அனுபவப்பூர்வமாக கண்டறிந்திருக்கிறார்.

Discussion Forum
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

No comments:

Post a Comment