Friday, 25 September 2015

Chemical tricks

சித்தர்கள் கண்டுணர்ந்த இயற்கையான வேதியல் சித்துக்கள். இன்று வியாபாரமாக உபயோகப்படுத்தப்படும் சில...இங்கே...
வெரும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்க..
சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால்உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.
உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்க
ு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.
நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.
மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,
நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.
இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை.
குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.

No comments:

Post a Comment