உடல் எடையை குறைக்க வேண்டுமா?
பச்சை பயிறு சாப்பிடுங்க..
பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும்
போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு
கிடைக்கின்றன.
குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான
பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை
தவறாமல் வாரம் ஒருமுறை
உட்கொண்டு வந்தால், அதில்
நிறைந்துள்ள சத்துக்களால் பல
நன்மைகளை பெறலாம்.
பச்சை பயிறு உடலில் ஏற்படும்
நோய்களை குணப்படுத்துவதோடு,
சருமம் மற்றும் கூந்தல்
பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன்
வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக்
குறைக்கவும் பச்சை பயறு
உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை
பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில்
சேர்த்து வாருங்கள்.
சத்துக்கள் நிறைந்தது
பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக
உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து
குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால்,
அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து
வாருங்கள். இதனால் உடலுக்கு
வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து,
இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில்
இருந்து தப்பிக்கலாம்.
சரும புற்றுநோய்
பச்சை பயறு சரும புற்றுநோயில்
இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
அன்றாடம் வெளியில் அதிகம்
சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு
அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால்,
சரும புற்றுநோய் ஏற்படுவதைத்
தடுக்கலாம்.
எடையைக் குறைக்கும்
உடல் பருமனைக் குறைக்கவும், உடல்
எடையை சீராக பராமரிக்கவும், பச்சை
பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக
வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க
முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும்
போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை
பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு
வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன்,
உடல் எடையும் கட்டுப்பாட்டுடன்
இருக்கும்.
Friday, 19 June 2015
Pachai payaru(moong dall )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment