சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்
மூப்புளகா யந்தணிந்து மோகம்
பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே சேப்புவருங்
கோமய
முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்
-தேரையர்.
முதியவர்கள் இளமை நிறைந்தவர்கள்
போல் அழகுடன் இருக்க நெல்லிக்
கனியை பாகம் செய்து சாப்பிடச்
சொல்கின்றனர்.
நெல்லிமுள்ளி, மருதம்பட்டை, கடல்
அழிஞ்சில், மஞ்சள்
ஆகியவற்றை வகைக்கு 100 கிராம்
வாங்கி ஒன்றாகத் தூள்
செய்து கொள்ளவும். இதில் 40 கிராம்
படிகார பற்பம் கலந்து வைத்துக்
கொள்ளவும். இதில் இரண்டு கிராம்
அளவு (அரை ஸ்பூன்) காலை-
இரவு இருவேளையும் உணவுக்குப்பின்
சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட
சர்க்கரை நோயும் கட்டுப்படும்.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை,
மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண
நோய்களுக்கு நன்மருந்தாகிறது.
சர்க்கரை நோயாளியின்
கணையத்தை வலுவேற்ற உதவும்.
மூப்பினை ஏற்படுத்தும்
தொல்லைகளைப் போக்கி, உடல்
உறுப்புகளை நல்ல நிலையில்
வைக்கும் திறன் படைத்தது.
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன்
சேர்த்து விழுது போல்
அரைத்தெடுத்து, பாலுடன்
கலந்து தலையில் தேய்த்துக்
குளித்து வந்தால் நரை இருந்தாலும்
கருக்கத் தொடங்கி விடும்.
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20
கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200
மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100
மி.லி என காலையும் மாலையும்
அருந்தி வந்தால் தலைச்சுற்றல்
கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்
கொதிப்பு நீங்கும்.
Thanks to Facebook community SITHTHARS WERE WORLD' S FIRST SCIENTISTS
No comments:
Post a Comment