#உணவில்_சாதாரண_உப்புக்கு
#பதிலாக……❓
#இந்துப்பு_பயன்_படுத்தலாமா…❓
#எந்தவகை_உப்பு_நல்லது ❓
⭐ கல் உப்பை விட இந்துப்பே சிறந்தது என்று வரும் ஏராளமான பதிவுகளை பார்த்து அனைவரும் இந்துப்பு பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்..❗
கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே சோடியம் குளோரைடு உள்ள கல் உப்பைப் போல பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பைச் சேர்க்கச் சொல்கிறார்கள். அத்துடன் இந்துப்பில் இயற்கையாகவே அயோடின் சத்து, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண்சத்துகளும் இருக்கின்றன.
கல் உப்பு நல்லது என்றாலும் சோடியம் அளவு அதிகரித்தால் இதய நோய் வரலாம். அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு பாதிப்பு வரும். இவற்றையெல்லாம் சரிசெய்ய பொட்டாசியம் குளோரைடு மற்றும் இயற்கையாகவே அயோடின் சத்து உள்ள இந்துப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.
இந்துப்பு மருத்துவக் குணம் நிறைந்தது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே போல ஒரு பொருளை பயன்படுத்தும் போது அதில் உள்ள நல்லது கெட்டதுகளை அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டு அல்லது அது சம்பந்தப்பட்ட விசயங்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு பயன்படுத்துவதே சிறந்தது..❗
👉கல் உப்பில் 94 சதவிகிதம் சோடியம் உள்ளது..
👉இந்துப்பில் 96 சதவிகிதம் பொட்டாசியம் உள்ளது..
நம் உடலுக்கு தேவை சோடியமே தவிர பொட்டாசியம் கிடையாது.
நம் மூதாதையர்கள் #மருந்திற்காக மட்டுமே இந்துப்பை பயன்படுத்தி உள்ளனர்..
பொட்டாசியம் குறைபாடு உள்ளவர்கள்
மட்டும் இந்துப்பை பயன்படுத்தினால் போதும். பொட்டாசியக்குறைபாடு சரியாகி விடும். அனைவரும் இந்துப்பு பயன்படுத்த வேண்டும் என்று சொல்வது பெரிய வணிக வியூகம்..
👉 ஒரு கிலோ கல் உப்பு அதிக
பட்சம் ரூ.10...
👉 இந்துப்பு ஒரு கிலோ குறைந்த பட்சம்
ரூ.80. அதிக பட்சம் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது...
சில பதிவுகளில் நம் முன்னோர்கள் இந்துப்பைத்தான் பயன்படுத்தினார்கள் என்றெல்லாம் வருகிறது...❗❓
ஆம்...பயன்படுத்தினார்கள்...❗
#வைத்தியர்கள் மட்டும் மருந்திற்காக பயன்படுத்தினார்கள்...
இயற்கையான முறையில் உப்பளங்களில் தயார் செய்யப்படும் உப்பே உடலுக்கு நன்மை தரக்கூடியது...
பொட்டாசியம் குறைபாடு உள்ளவர்கள் அதனை நிவர்த்தி செய்ய வைத்தியரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இந்துப்பை பயன்படுத்த வேண்டும்...
தமக்கு தாமே இந்துப்பை பயன்படுத்தினால்.சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்..
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொன்னாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
🔯 #இந்துப்பு_பயன்கள்_என்ன❓
⭐ பொட்டாசியம் குறைபாட்டால் சிலர் புத்தி சுவாதீனம் பிடித்தவர்கள் போன்று காணப்படுவார்கள். அவர்களுக்கு உணவில் இந்துப்பை சேர்த்து கொடுத்து வந்தால் அவர்களின் புத்தி சுவாதீனம் தீரும்..
⭐ ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதுடன் சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய சுவையின்மை பிரச்சினையைச் சரிசெய்யும்.
⭐ எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டி தடுக்கவும் இந்துப்பு பயன்படுத்துவதன் மூலம் தங்களைக் காத்துக் கொள்ளலாம்.
⭐ உடல்பருமன் பிரச்சினையிலிருந்து காத்துக்கொள்ள இந்துப்பு பயன்படுத்தலாம்.
⭐ மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது இந்துப்பு.
⭐ உண்ணும் உணவில் தொடங்கி உடலில் ஏற்கெனவே உள்ள சக்தியை ஆற்றலாக மாற்ற பயன்படுத்தும் உயிர் வேதியியல் செயல்முறைகளின் கலவையே வளர்சிதை மாற்றம். இந்தப் பணியைச் சரியாக செய்ய இந்துப்பு உதவும்.
⭐ செரிமானத்தைத் தூண்டும்.
⭐ மலசிக்கலை நீக்கும்.
⭐ மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
⭐ சீக்கிரம் வயதாவதைத் தள்ளிப்போட உதவும்.
⭐ சுவாசத்தைச் சீராக்கும்.
⭐ தசைப்பிடிப்பைக் குறைக்கும்.
⭐ சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
⭐ சைனஸ் பிரச்சினை வராமல் தடுக்கும்.
⭐ நாள் பட்ட சளி,இருமல் உள்ளவர்கள் இந்துப்பை பயன்படுத்தலாம்..
இப்படி பல்வேறு பிரச்சினைகளைத் தடுக்கவும் அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கவும் உதவுகிறது.
🈵 #சிறுநீரகச்_செயலிழப்பில்_இருந்து #இந்துப்பு_பாதுகாக்குமா❓
"" சிறுநீரகச் செயலிழப்பில் இருந்து இந்துப்பு பாதுகாக்கும் "" என்ற செய்தி முகநூல், வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு இணையங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது. உண்மையிலேயே இந்துப்புக்கு அந்த அளவுக்கு சக்தி இருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. சோடியம் நம் உடலில் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியமான நுண்ணூட்டச்சத்தாகும்.
👉 சிறுநீரகம் செயலிழந்த பலருக்கு சோடியம் குளோரைடின் அளவு அதிகரித்திருக்கும். அதேவேளையில் பொட்டாசியம் குளோரைடு குறைவாக இருக்கும். சிலருக்கு பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கலாம்.
👉 சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டவர்களுக்கு சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்திருந்தால் கல் உப்பைத் தவிர்த்து இந்துப்பைப்
பயன்படுத்தலாம்.
👉 பொட்டாசிய குறைபாட்டால் சிறுநீரகம் செயல் இழக்க நேருமானால் இந்துப்பை பயன் படுத்தலாம். மற்றவர்கள் கண்டிப்பாக இந்துப்பை பயன் படுத்தக்கூடாது. பாதிப்பு ஏற்படும்.
👉 பொட்டாசியத்தின் அளவு ஓரளவு அதிகரித்ததும் கல் உப்பு, இந்துப்பு என மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். மற்றபடி இந்துப்பு பயன்படுத்தியதால் சிறுநீரகம் செயலிழப்பு குணமாகும் என்பது சொல்லப்படும் தகவல்கள் 100% உண்மையல்ல பொய்…❗
🔴 அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
இந்துப்பு என்றில்லை, எந்த உப்பாக இருந்தாலும் அளவோடு சேர்த்துக் கொள்வதே நல்லது.
No comments:
Post a Comment