ஈரோட்டு விவசாயிடமிருந்து நேரடியாக வீட்டிற்கு....
முதல்தர சுத்தமான பாரம்பரிய முறையில் வாகை மரச்செக்கினால் தயாரிக்கப்பட்ட இயற்கை நல்லெண்ணெய்,கடலெண்ணெய்,தேங்காய் எண்ணெய் மற்றும் இயற்கை வழி நாட்டுச்சர்க்கரை மற்றும் குளியல் பவுடர் தயாரிப்பாளர்.
எமது உள்ளது உள்ளபடியே மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு விபரம்,
நல்லெண்ணெய்:
கால்சியம் நிறைந்த மண்ணில்(காங்கேயம் காளைகள் வளரும் பகுதி)விளைந்த தரமான செங்கூர் எள்ளை கல்,மண் நீக்கி சுத்தம் செய்தபிறகு தண்ணீரில் ஊறவைத்து அலசி நீரில் மிதக்கும் பாளை கழிவுகளை அகற்றி(இந்த கழிவுகளை அகற்றினால் மட்டுமே கச்சல்,காரல் வராது)இயற்கையாக வெய்யிலில் காயவைத்து இவற்றுடன் 1கிலோ எள்ளுக்கு 100கிராம் வீதம் பனங்கருப்பட்டி சேர்த்து பாரம்பரிய குளிர்வித்தல் முறையில் வாகை மரச்செக்கில் ஆட்டிய பிறகு வரும் நல்லெண்ணெயை வெய்யிலில் காயவைத்து நீர்த்தன்மையை உலர்த்தி குறைந்தபட்சம் எட்டு நாட்களுக்கு பாத்திரத்தில் வைத்து தானாக வடிகட்டி தெளிந்தபின்னர் விற்பனைக்குத் தருகிறேன்.
கடலெண்ணெய்:
மானாவாரி நிலத்தில் விளைந்த நிலக்கடலை பருப்பை சுத்தம் செய்து பிஞ்சு,பூஞ்சான்,முளைப்பு வந்த பருப்பு ஆகியவற்றை நீக்கி (இவைகளையெல்லாம் நீக்காவிட்டால் உடலுக்கு மிக கொடிய வியாதியை உருவாக்கும் aflatoxin போன்ற தீய நச்சுக்கள் எண்ணெயில் சேர்ந்தே இருக்கும்) வெய்யிலில் காயவைத்து மரச்செக்கில் ஆட்டி வடிகட்டி தெளிந்தபிறகு விற்பனைக்கு தருகிறேன்.
தேங்காய் எண்ணெய்:
மரத்திலேயே காய்ந்து விழுந்த தேங்காயை கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்வரை தோட்டத்திலேயே காய்ந்து கசங்கள் நிலைக்கு வந்த பிறகு உடைத்து எந்தவிதமான கெமிக்கல் புகையும் இல்லாமல் தானாக வெய்யிலில் இயற்க்கையாக காய்ந்த பிறகு (இப்படி இயற்கையாக காயவைத்தால் மட்டுமே தலைமுடி நரை வராது,உதிராது,கண் குளிர்ச்சி,உணவுக்கு பயன்படுத்தலாம்) தேங்காய் பருப்புடன் ஏலக்காய்,எலுமிச்சம்பழம் மற்றும் கரும்புவெல்லம் சேர்த்து மரச்செக்கில் ஆட்டி வெய்யிலில் காயவைத்து வடிகட்டி தெளிந்த பிறகே விற்பனைக்கு தருகிறேன்.
இயற்கையின் உயிரோட்டமும்,
தாவரத்தின் பச்சயமும்,
உழைப்பின் உண்மையும்,
ஆரோக்கியத்தின் மேன்மையும்,
உள்ளது உள்ளபடியே மரச்செக்கு எண்ணெய்
நல்லது மட்டும் தங்கள் இல்லம் தேடி.....
இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் எந்த ஒரு இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக தங்களின் வீட்டிற்கே கொரியர் மூலம் அனுப்பி வைக்கிறேன்.
Direct home delivery by courier only,
நல்லெண்ணெய் 1 லிட்டர் ரூ.310,
கடலெண்ணெய் 1 லிட்டர் ரூ.250,
தேங்காய்எண்ணெய் 1 லிட்டர் ரூ.220,
கொரியர் செலவு,
ஒரு லிட்டருக்கு ரூ.30,கூடுதல்(தமிழ்நாடு),
தென்னிந்தியாவிற்கு ரூ.40, கூடுதல்,
வடமாநிலங்களுக்கு ரூ.50, கூடுதல்.
தேவையிருப்பின் அழையுங்கள்,
சீனு,
ஸ்ரீவாகை ஆர்கானிக்ஸ்,
கொங்குடையாம்பாளையம் கிராமம்,
ஈரோடு.
அலைபேசி; 99 76 340000.
www.Facebook.com/traditionaloils
MY ALL TRADITIONAL PRODUCTS MANUFACTURED IN AS PER ORGANIC PRODUCTION STANDARDS
No comments:
Post a Comment