Saturday, 29 July 2017

Weight loss Karunai kilangu

கிழங்குகளில் உடலிற்கு நன்மை பயக்கும் கிழங்கு என்பதால் கருணைமிகு இக்கிழங்கை கருணைக் கிழங்கு என நம் தமிழச்சித்தர்கள் அழைத்தனர்.

"குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு"

அன்று கொடி இடை, இன்று கொழுப்பு, தைராய்டு சுரப்பு குறைவு ஆகியவற்றால் பலர் கொடி மரத்து இடைபோல் காட்சியளிக்கின்றனர். தைராய்டு சுரப்பு குறைவு உள்ள பெண்களுக்கு கருப்பை கோளாறு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் பெற கால தாமதம் ஆகிறது. மேலும் மாதவிடாய் கோளாறும் தொடர் கதையாய் தொடர்கிறது.

தைராய்டு சுரப்பு குறைவை சரியாக்கி முப்பது நாட்களில் குணமாக்கும் சித்த மருந்துகள் உண்டு. இரத்த சோகை, மாதவிடாய் தடையால் ஏற்படும் உடல் ஊதலுக்கு தனி மூலிகை மருந்துகள் தேவை.

"குண்டுடல் கொடுக்கும் உருளைக் கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக் கிழங்கு" என்ற மூலிகை மணி வாசகப்படி நாம் குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கின் உயர்வை உணரலாம். உடல் எடை அதிகமாகி, பார்வைக்கு அசிங்கமாகி, மூட்டுவலி, முள்ளந்தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படும் குண்டுடல் உள்ளோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு ஆகும்.

பொதுவாக ஐந்தரை அடி உயரமுள்ளோர் அறுபத்தைந்து கிலோ எடை இருக்க வேண்டும்.

"வைத்தியர் அய்யா, கனத்த உடல் உள்ள என் குழந்தை கட்டுடலாய் ஆக கருணை காட்டுங்கள்" என்றாள் தாய். "கருணை தான் காட்டப் போகிறேன்" என்றார் வைத்தியர் இரு பொருள் படும்படி.

இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட கருணைக் கிழங்கின் கனத்த உடல் கரைத்திடும் உயர்வை உணர்வீர்கள். “என்ன விலை அழகே, கருணை உண்டு வருவேன், கனத்த உடல் கரைந்து நிற்பேன்" என்றுதான் பாடுவீர்கள். குண்டுடலால் உடல் உறுப்புகள் இரு பங்கு செயல்படும் நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு வரும் மூட்டு வலி, மூச்சிறைப்பு, முள்ளந்தண்டு வலி ஆகியவை குணமாக கால தாமதமாகிறது.

குண்டுடல் உள்ளோர் உணவில் வாழைத்தண்டு சூப், முருங்கைக் கீரை காம்பு சூப், முட்டைகோஸ் சூப், கொள்ளு கஞ்சி போன்ற திரவ உணவுகளை தினசரி உணவில் சாப்பிட வேண்டும். தொட்டுக் கொள்ள கருணைக் கிழங்கு புளிக்குழம்பு, கீரைத்தண்டு சாம்பார் பயன்படுத்தவும்.

நொறுக்குத் தீனி தின்பதை நிறுத்த வேண்டும். அடிக்கடி காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும். தண்ணீர் குடிக்க தடை இல்லை. அதிக ரத்தக் கொதிப்பு உள்ளோர் சீரகம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய நீர் குடித்தால் நல்லது. தேங்காய், நிலக்கடலை, தயிர், அசைவ உணவுகள், உருளைக் கிழங்கு, பூசணிக் காய், கோழி முட்டை ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.

சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் ஒரு லிட்டர் குடிக்கவும்.

காலையில் எழுந்தவுடன் வெந்நீர் இருநூறு மில்லியில் இரண்டு ஸ்பூன் தேன் (பத்து கிராம்) கலந்து குடிக்கவும். ஆடாதொடை ஆபத்தும் கலந்து குடிக்கலாம். சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் உணவில் சேர்க்கவும். கடலை எண்ணெய், நெய், டால்டா நீக்கவும். தினசரி மதிய உணவில் கருணைக் கிழங்கு முன்னூறு கிராமுக்கு குறையாமல் சமைத்து சாப்பிடவும். ஊறவைத்த அவல் காலை, இரவு சாப்பிடவும், மதியம் வெள்ளரிப்பிஞ்சு மட்டும் சாப்பிட உடல் எடை விரைவில் குறையும்.

பொன்னாங்கன்னிக் கீரையை மிளகு தாளித்து பயன்படுத்த உடல் எடை குறையும். தொட்டுக் கொள்ள கீரைகளை பயன் படுத்தவும். இம்முறைப்படி தொடர்ந்து சில மாதங்கள் சாப்பிட, மாதம் ஐந்து கிலோ எடை குறையும்.

Saturday, 22 July 2017

Cancer medicine

புற்றுநோய்(Cancer)!

புற்றுநோய் என்று உறுதி செய்த பின், கீமோ அல்லது சர்ஜரி செய்யாதவர்கள் நூறு சதவிகிதம் முழுமையாய் குணம் பெற மிக குறைந்த செலவில், சோதிக்கப்பட்ட, பக்க விளைவுகள் இல்லாத, இரசாயனமற்ற  இயற்கை மற்றும் மூலிகை மருந்துகள் கொடுக்கப்படும்.

தொடர்புக்கு: 9940175326

Sugar bone

இதய நோயை உண்டாக்கி எலும்பை முறிக்கும் சர்க்கரை!

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரை எனப்படும் சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இப்படிதான் நீங்களும் தினமும் அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்த்துக் கொள்பவரா? ஆம் எனில் உங்களுக்கான அதிர்ச்சி தகவல் தான் இது. இதனால் இதய நோய் உங்களை விரைவில் தாக்கும் என்பதுடன் எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.இதற்கிடையில் வழக்கமாக பருகும் காபி, டீ, உட்பட பானங்களில் சர்க்கரை போதவில்லை என்று கூறி எக்ஸ்டரா சர்க்கரையை சேர்த்து சிலர் பருகுவார்கள். மேலும் சிலர் இனிப்பு பலகார வகைகளை அதிகமாக உன்பர். இவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய அமெரிக்க நோய் தடுப்பு ஆணையம், ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தினமும் அதிகமா சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறைந்த அளவு சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 2000 கலோரி உணவுகளை ஒருவர் எடுத்துக்கொள்வதாகவும், இதோடு சேர்த்து 34 கிராம் சோடா சேர்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் சோடா, மற்றும் சர்க்கரை பானங்களை பருகுவதை அமெரிக்காவில் பலர் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த பழக்கத்தால் இவர்களில் பலருக்கு இதயநோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க நோய் தடுப்பு ஆணைய பேராசிரியர் குயான்சி யாங் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஏறபடும் இதய நோய் பாதிப்பால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கேன்டிடா எல்பிகன்ஸ்’ என்ற பெண் உறுப்பு தொற்றுநோயை, சர்க்கரை இன்னும் அதிகளவு துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக “சுக்ரோஸ்’ உள்ள உணவு எலும்பில் கால்சியத்தை குறைத்து, எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது. காபி அல்லது டீ-யில் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சர்க்கரையை மட்டுமே சேர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடாமல் இருந்தால், இன்னும் சிறப்பு தான். எனவே, மெல்ல கொல்லும் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.

Kollu horse gram to reduce weight

இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது.

செய்முறை:
முன்னாள் இரவே ஒரு ஐம்பது கிராம் கொள்ளை தண்ணிரில் கழுவிய பிறகு 750 மிலி தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு காலையில் வேகவைத்து அதை வடிகட்டி அந்த தண்ணீரில் கொஞ்சம் வெல்லம் கலந்து வெறும் வயிற்றில் பருகி வர தொப்பை குறையும். உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பு நீங்கும்.